Connect with us
Cinemapettai

Cinemapettai

atlee-priya1

Photos | புகைப்படங்கள்

8 வருட கனவு, உச்சகட்ட சந்தோஷத்தில் பிரியா அட்லி.. ட்விட்டரில் வைரலாகும் கற்பகால புகைப்படங்கள்

இயக்குனரான அட்லி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருக்கிறார்.

இளம் இயக்குனரான அட்லி தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வந்துள்ளார். இவரது அறிமுகப்படமான ராஜா ராணி படத்தை தொடர்ந்த தளபதி விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படத்தை அட்லி கொடுத்திருந்தார். இப்போது பாலிவுட் வசம் சென்றுள்ளார்.

இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 8 வருடங்களாக சந்தோசமான நட்சத்திர தம்பதியர்கள் ஆக வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்து பலரும் பொறாமை படுகின்றனர். அதிலும் அட்லிக்கு இப்படி ஒரு மனைவியா என்றும் பலரும் வயிற்று எரிச்சலில் உள்ளனர்.

அட்லியின் 8 வருட கனவு நிறைவேறிய புகைப்படம்

atlee-priya-1-cinemapettai

atlee-priya-1-cinemapettai

Also Read: காதலுக்கு கண்ணில்லை என்பதை நிருபித்த 5 நட்சத்திர தம்பதியினர்.. அழகை பார்க்காமல் கரம் பிடித்த அட்லி-பிரியா

இப்போது இந்த காதல் ஜோடியின் 8 வருட கனவு நினைவானதால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கின்றனர். இவர்களின் அன்பிற்கு அடையாளமாக பிரியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவருடைய கர்ப்பபால புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்து ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.

பிரியாவின் கர்ப்ப கால புகைப்படம்

atlee-priya-2-cinemapettai.jpg

atlee-priya-2-cinemapettai.jpg

மேலும் அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஜவான் படம் திரைக்கு வர இருக்கிறது.

Also Read: ரெண்டே படம் பாலிவுட்டிலே செட்டிலாகும் அட்லீ.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் டாப் ஸ்டாரான சல்மான்கான் இடம் அட்லி ஒரு கதை கூறியுள்ளாராம். சல்மான் கானுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து போக படத்தில் நடித்த ஒப்புக்கொண்டாராம். இதனால் விரைவில் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அப்பாவாகப் போகும் அட்லி

atlee-priya-3-cinemapettai.jpg

atlee-priya-3-cinemapettai.jpg

Continue Reading
To Top