ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அவங்க மூணு பேரும் இருந்தாத்தான் பங்க்ஷன்.. வெந்து தணிந்தது காடு படத்துக்கு துண்டை போட்ட ஐசரி கணேஷ்

தமிழில் கோமாளி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருப்பவர் ஐசரி கணேஷ். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரித்துள்ளார். மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் வெளியீடு சில பல தடங்கல்களால் தள்ளிக் கொண்டே போனது. இப்போதுதான் அதற்கு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்துள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்பட ரிலீசுக்கு ஒரு வாரம் முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருக்கிறார். அந்த விழாவில் ரஜினி, கமல், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்.

ஆனால் அதில் தான் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த தேதிக்குள் நாடு திரும்புவாரா என்பது சற்று சந்தேகமாகவே இருக்கிறது.

மேலும் ரஜினி, கமல் இருவரும் இதில் கலந்து கொள்வதற்கான சாத்தியங்களும் குறைவாக இருக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் மூன்று பேரும் வந்தால் தான் இந்த படத்தின் ஆடியோ விழாவை நடத்துவேன் என்று திட்டவட்டமாக கூறி வருகிறாராம்.

ஏற்கனவே இந்த படம் பல பிரச்சினைகளுக்கு நடுவில் இப்பொழுதுதான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் தயாரிப்பாளரே இப்படி ஒற்றை காலில் நின்று அடம்பிடித்து வருவது பட குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அந்த தேதியில் ஆடியோ லான்ச் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையில் பட குழு தற்போது இருக்கின்றனர்.

- Advertisement -

Trending News