கோப்ரா பட தோல்வியால் அஜய் ஞானமுத்துக்கு ஏற்பட்ட சிக்கல்.. பின்வாங்கி அடுத்த பட டாப் ஹீரோ

டிமான்டி காலனி அதைத்தொடர்ந்து இமைக்காநொடிகள் ஆகிய இரண்டு தொடர் ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸின் அசிஸ்டெண்ட் டைரக்டரான இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான கோப்ரா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிகிறது.

இதனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அடுத்து நடிப்பதற்கு கதை கேட்ட முன்னணி நடிகர் ஒருவர், தற்போது அவருடன் இணைவதற்கு தயக்கம் காட்டுகிறார். சியான் விக்ரம் பத்து வேடங்களில் கோப்ரா படத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்ததும் அந்த படத்திற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருடைய ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.

Also Read : மண்ணுளிப் பாம்ப வித்துட்டாங்க செட்டியார்.. சதுரங்க வேட்டையை வைத்து கோப்ராவை கலாய்த்த நெட்டிசன்கள்

மேலும் 100 கோடி பட்ஜெட்டில் உருவான கோப்ரா படத்தின் வசூல் முதல் இரண்டு நாட்களில் வெறும் 38 கோடி மட்டுமே கலெக்சன் செய்து படக்குழுவை பெரும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது. இதனால் இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்திற்கு பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கோப்ரா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிவதால், அடுத்ததாக அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பதற்காக கதை கேட்கப்பட்டு, அதில் நடிக்க பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்திருக்கிறது.

Also Read : OTT வியாபாரத்திற்காக கோப்ரா தயாரிப்பாளர் செய்த காரியம்.. கெஞ்சி வாங்கிய தணிக்கை சான்றிதழ்

ஆனால் தற்போது கோப்ரா படத்திற்கு எழும் விமர்சனங்களை பார்த்தால், அந்தக் கூட்டணி இணைவது ரொம்ப கஷ்டம். இதை அஜய் ஞானமுத்து எப்படி சமாளிப்பது என தெரியாமல் திணறுகிறார். இந்த மாத இறுதியில் கார்த்தி உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில்,  பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகிறது.

அந்தப் படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் வேற லெவலுக்கு செல்ல போகிறது. ஆகையால் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே கார்த்தியின் கால்ஷீட்டை வாங்கி விட வேண்டும் என்ற அஜய் ஞானமுத்து ஏதேதோ சொல்லி அவரை விட்டுவிடாமல் இழுத்துப் பிடிக்க நினைக்கிறார். ஆனால் கோப்ரா படத்தினால் கார்த்தி-அஜய் ஞானமுத்து கூட்டணி இணைவதில் தற்போது சாத்தியம் இல்லாதது போல் தெரிகிறது.

Also Read : 20 நிமிடம் குறைத்தும் கல்லா கட்ட முடியாத கோப்ரா.. 2ம் நாள் வசூலை பார்த்து அதிர்ச்சியில் விக்ரம்

- Advertisement -spot_img

Trending News