புதன்கிழமை, மார்ச் 19, 2025

ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்ரவுண்டர். சமீப காலமாகவே ஜடேஜாவின் செயல்பாடு இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகள் என்றால் ஏழாவதாக களமிறங்கி நிலைத்து நின்று ஆடுவதும், ஒருநாள் போட்டி என்றால் கடைசியில் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடுவதும் இவருடைய தனிச்சிறப்பு.

ஆனால் சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அதன்பின் அவர் கட்டாயமாக ஒரு வருடம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள். அவர் ஒரு வருடம் ஓய்வெடுத்தால் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம். அதனால் அவருடைய கிரிக்கெட் கேரியர் கேள்விக்குறியாக மாறி உள்ளது..

ஜடேஜாவை போலவே சில மாதங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவிற்கும் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த வலியிலிருந்து மீண்டு கிரிக்கெட்டுக்கு திரும்பிய அவர் ஐபிஎல் உட்பட பல போட்டிகளில் பந்து வீசாமல் பேட்டிங் வீரராக மட்டுமே விளையாடி வந்தார்.

Pandya
Pandya

ஆல்-ரவுண்டராக இருந்துகொண்டு பேட்டிங் பிடிப்பது மட்டும் போதாது, பந்துவீச்சும் அவசியம் என்று பிசிசிஐ அவருக்கு வார்னிங் கொடுத்தது.
அதன்பின் அவர் சில போட்டிகளில் 2, 3 ஓவர்களை வீசினார். இருந்தாலும் அது போதாது என்றும், குறைந்தது எதிரணியை சமாளிக்கக்கூடிய அளவிற்காவது பந்துவீச வேண்டும் என திட்டவட்டமாக கூறியது பிசிசிஐ.

ஒருநாள் போட்டிக்கே இந்த நிலைமை என்றால் டெஸ்ட் போட்டியில் அவரது நிலைமை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது கடினம், அதனால் ஹர்திக் பாண்டியா கூடிய விரைவில் டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News