வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பசங்களால் தொடர்ந்து அவமானப்படும் கோபி.. எரிமலை மாதிரி வெடிக்காமல் மக்கு மாதிரி இருக்கும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது கொஞ்சம் ஓவராக தான் போய்க்கொண்டிருக்கிறது. பாக்கியா இருக்கும் வீட்டிற்குள் ராதிகாவையும் கூட்டிட்டு வந்து இவர்கள் ஒரே வீட்டில் பண்ணும் அட்டூழியத்தை பார்க்கும் பொழுது குழந்தை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல் தான் இருக்கிறது. கோபியோட இந்த கேரக்டர்னால் தான் தொடர்ந்து அவருடைய பசங்களால் அவமானப்பட்டு வருகிறார்.

ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள். ஆனாலும் திருந்தாமல் இன்னும் பாக்கியாவை சீண்டிப் பார்க்கிறார். அதிலும் ராதிகா வேண்டுமென்றே பாக்கியாவிடம் பேசி இப்பொழுது தான் வெளியில் தெரிகிறது உன்னுடைய கேரக்டர் என்னவென்று. இன்னும் போக போக எல்லாரும் தெரிந்து வீட்டை விட்டு துரத்துற நேரமும் வரும் என்று அநாகரிகமாக பேசுகிறார்.

Also read: கோபிக்கு இந்த அவமானம் தேவையா?. பாக்யாவிற்காக மகன்கள் கொடுத்த அடி

இவ்வளவு தூரம் பேச விட்டுட்டு அமைதியா வேடிக்கை பார்க்கிறதே வேலையா போச்சு மக்கு பாக்கியாவிற்கு. கொஞ்சமாவது தனக்கு ஏதாவது ஒன்று என்றால் வாயைத் திறந்து பேசினால் மட்டும்தான் நல்லா இருக்கும். அதை விட்டுப் போட்டு அமைதியின் சிகரம் நான் தான் என்று ஓவராக அடங்கி போகிறார். அதனால் தான் ராதிகா தல மேல ஏறி நின்னு ஆடிக்கிட்டு இருக்கிறார்.

பாக்கியா எவ்வளவு பட்டாலும் திருந்தவே மாட்டாங்க. ஆனாலும் இவருக்கு ஒரு நல்ல விஷயம் என்றால் இவருடைய பசங்கள்தான். அம்மாவுக்கு ஒன்னு என்று தெரிந்ததும் ரெண்டு பசங்களும் பாக்கியாவிற்கு பக்கத்தில் நின்று சப்போர்ட்டாக பேசினது பெரிய விஷயம். அடுத்ததாக எப்போதுமே பாக்கியாவின் அன்பை உதாசீனப்படுத்தும் இனியா தற்போது அவருடைய பள்ளியில் அம்மாவை பற்றி பேசி பெருமை சேர்த்து விடுகிறார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

இங்கேயும் வந்து கோபி அவமானப்பட்ட தான் மிச்சம். அடுத்ததாக ராதிகா அடுப்பங்கரையில் வேலை பார்க்கும் பொழுது அங்கே வந்த கோபியிடம் இந்த வீட்டில் நம்ம மட்டும் தனியாக இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது இந்த மாதிரி வாழ்க்கை நமக்கு கிடைக்குமா என்று கேட்கிறார். உடனே கோபி அது தெரியவில்லையே பார்க்கலாம் எப்படி என்று சொல்லி இருவரும் ரொமான்ஸ்க்கு போய் விட்டார்கள். ஆனால் இதைப் பார்க்கவே கண்றாவியாக தான் இருக்கிறது.

பாவம் இதை செழியன் வேற பார்த்து தொலைச்சுட்டான். ஏற்கனவே இவன் கதை என்ன ஆகப்போகுது என்று தெரியல. இவரும் கோபி மாதிரி மாலினிடம் சிக்கிக் கொள்ளப் போறாரா என்பது அவ்வப்போது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஊமையாக இருக்கிறவன் தான் நம்ப கூடாது. செழியன் எந்த மாதிரியான ஏழரையை கூட்டிட்டு வரப் போகிறார் என்று தெரியவில்லை. ஆக மொத்தத்துல பாக்கியலட்சுமி தொடர் கதை கொஞ்சம் படு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -

Trending News