2022-ல் தோல்வி படங்களை மட்டுமே கொடுத்த 5 ஹீரோக்கள்.. ரொம்பவும் மோசமாக போன விஜய்சேதுபதியின் ஹீரோயிசம்

2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கலவையான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. லவ் டுடே உள்ளிட்ட சில திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமான வெற்றியையும், முன்னணி நடிகர்களான விஜய், அஜித்தின் திரைப்படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் தோல்வியையும் கொடுத்துள்ளன. அப்படி இந்தாண்டு வசூலிலும், படத்தின் கதையிலும் வெற்றி பெறாத ஐந்து நடிகர்களின் படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சூர்யா : நடிகர் சூர்யா நடிப்பில் மார்ச் மாதம் வெளியான எதற்கும் துணிந்தான் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. இப்படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி, வினய் உள்ளிட்ட பலர் நடித்த நிலையில்,காமெடி, காதல், ஆக்ஷன் என உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருப்பார். இத்திரைப்படம் சூர்யாவிற்கு ஏற்ற படம் இல்லை என பலரும் விமர்சனம் செய்த நிலையில், எதற்கும் துணிந்தான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது.

Also Read : அடுத்தடுத்து தயாரிப்பாளர்களை காலி செய்த விஜய் சேதுபதி.. உதவி செய்ய வந்து உபத்திரவமான கதை

விஜய் சேதுபதி : இந்த வருட தொடக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல், மாமனிதன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இரண்டு திரைப்படங்களும் விஜய்சேதுபதியின் ஹீரோ நடிப்பிற்கு கை கொடுக்காமல் மாபெரும் தோல்வியைத் தழுவியது. இதில் முக்கியமாக மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாக கூட வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம்.

விக்ரம் : நடிகர் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டு மகான், கோப்ரா உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் வெளியானது. பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸில் மகான் படம் ரிலீசான நிலையில், இத்திரைப்படம் விக்ரமிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. அடுத்ததாக நான்கு வருடங்கள் படப்பிடிப்பிற்கு பின்னர் ரிலீசான கோப்ரா படத்தில் பல கெட்டப்புகளில் வளம் வந்த விக்ரம், படத்தின் கதை சரியாக அமையாததால் விக்ரமிற்கு இத்திரைப்படமும் கைக்கொடுக்கவில்லை.

Also Read : ஆர்யாவை சர்ச்சையில் சிக்க வைத்த முத்தையா.. காதர் பாட்ஷா போஸ்டரில் இருக்கும் மர்மம்

ஆர்யா : நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன் திரைப்படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருப்பார். இத்திரைப்படம் ஆர்யாவின் திரை வாழ்க்கையை மொத்தமாக மூட்டை கட்டும் வகையில் படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் அமைந்தது எனலாம். ப்ரீடேட்டர் பட பாணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், பார்ப்பதற்கு எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் உள்ளதாக பல விமர்சனங்கள் செய்யப்பட்டது.

ஜீவா : நடிகர் ஜீவா ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் 2022ஆம் ஆண்டு அவருக்கு அமைந்த நிலையில், காபி வித் காதல், வரலாறு முக்கியம, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களும் அவரது நடிப்பில் வெளியானது. ஆனால் மூன்று திரைப்படங்களும் ஜீவாவிற்கு தொடர் தோல்வியையே கொடுத்துள்ளது. தற்போது ஜீவா தனது தந்தையை போல சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்தி பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

Next Story

- Advertisement -