நிறைமாத கர்ப்பிணியாக கிளாமர் டிரஸ்ஸில் ஆட்டம் போடும் அமலா பால்.. ஆத்தி! சுத்தி போட்டுக்கோங்க!

Amala Paul: முன்பெல்லாம் கர்ப்பமான மூணு மாசத்துக்கு வெளியில யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ நிலைமையே வேறு. டெஸ்ட் எடுக்கும் போதே அதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸா போட்டுடுறாங்க.

சாமானிய மக்களே இப்போ குழந்தை கருவுற்றதை கோலாகலமாக கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ பெரிய செலிபிரிட்டிகளை கேட்கவா வேண்டும். அதிலும் அமலா பால் தான் தாய்மை அடைந்ததை கொண்டாடும் விதம் அவ்வளவு அழகாக இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய நெருங்கிய நண்பரும், டிராவல் பார்ட்னரும் ஆன ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார் என்பதற்கு அவருடைய முகப்பொலிவு தான் சாட்சி.

மண வாழ்க்கை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே அமலாபால் கருவுற்று இருப்பதாக ஒரு போட்டோஷூட் மூலம் அறிவித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த The Goat Life படம் ரிலீஸ் ஆனது. எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் படத்தின் பிரமோஷன் விழாக்கள் அத்தனையிலும் கலந்து கொண்டு இருந்தார்.

அந்த படத்தில் நான் கர்ப்பமுற்றது போல் நடித்திருந்தேன், இப்போது நிஜமாகவே கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி உள்ளம் மகிழ்ந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு புகைப்படங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார்.

தற்போது அமலா பால் கர்ப்பிணிகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து இருக்கிறார். அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். சிகப்பு நிற கவுனில் தன்னுடைய பேபி பம்ப் கியூட்டாக தெரியுமாறு போஸ் கொடுத்து இருக்கிறார்.

அமலா பால் தன்னுடைய கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருப்பதற்கு தற்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் கண்ணு பட்டுட போது சுத்தி போட்டுக்கோங்க என்று சொல்லி சிலாகித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்