Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இசைக்கு கூட தலைவணங்க வில்லையா.. தலைகனத்துடன் இருக்கும் அஜித், விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இவர்கள் மீது ஒரு கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா பல மொழிகளில் 7000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதுவும் இவரது இசையில் 70, 80களில் வெளியான பாடல்கள் இன்றும் தொலை தூரப்பயணத்தில் ரசிகர்கள் கேட்கும் பாடல்களின் ப்ளேலிஸ்டில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் கலை சேவையை பாராட்டும் விதமாக மாநிலங்களவை உறுப்பினராக அவரை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் பல ரசிகர்கள் இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி தனிப்பட்ட முறையிலும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பொக்கிஷமாகக் திகழும் இளையராஜாவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், ஓபிஎஸ், திருமாவளவன் என அனைத்து கட்சியைச் சார்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

மேலும் இளையராஜாவின் 50 வருடகாலமாக நண்பராக இருக்கும் இயக்குனர் பாரதிராஜாவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் கமலஹாசன் இளையராஜாவுக்கு ஒரு வாழ்த்து மடல் ஒன்றை அழகாக வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையைச் சார்ந்த பார்த்திபன், விஷால் மற்றும் பல நடிகர், நடிகைகள் இளையராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜீத், விஜய் இருவருமே இளையராஜாவுக்கு ஒரு வாழ்த்து செய்தி கூட சொல்லாதது இணையத்தில் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. தமிழ் நாட்டிற்குப் பெருமை சேர்த்த இளையராஜாவுக்கு வாழ்த்து கூறாமல் இவ்வளவு தலை கனத்துடன் உள்ளார்களே என அனைவரும் விமர்சித்து வருகிறார்கள்.

Continue Reading
To Top