ஒரு ஆஃபரை வைத்து கொக்கி போட்ட பல ஆஃபர்கள்.. ஹன்சிகா அம்மா போட்ட பெரிய ஸ்கெட்ச்

ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் பப்ளி ஆன ஹீரோயினாக குஷ்பூ மாதிரி ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகிறார். ஆரம்பத்தில் இவரது நடிப்புக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தாலும் போகப்போக இவர் நடிப்பு அனைவருக்கும் புளித்து போய்விட்டது.

சற்று குண்டாக இருக்கிறார், சரியான நடிப்பு வரவில்லை என்றெல்லாம் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் இப்பொழுது தூக்கி எறிந்து விட்டார். சமீபத்தில் இவர் ஓடிடி-ல் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த படத்திற்காக இவருக்கு சுமார்ஒன்றரை கால் கோடி சம்பளம் பேசப்பட்டது.

அதற்கும் அக்ரிமெண்ட் போட்டது ஹன்சிகாவின் அம்மா. அந்த அக்ரிமென்ட் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு அவர்கள் இவ்வளவு சம்பளம் தருகிறார்கள் நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று தவறாக பேசி நாலைந்து வாய்ப்புகளை வசப்படுத்திக் கொண்டாராம்.

ஒரு ஆஃபரை வைத்து கொக்கி போட்டு பல ஆஃபரை ஹன்சிகாவின் அம்மாவின் உதவியால் வாங்கி விட்டார். மேலும் ஹன்சிகா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார். இதுவும் இவருக்கு கூடுதல் பட வாய்ப்புகளை வரவைக்க உதவுகிறது.

தற்சமயம் ஹன்சிகா கைவசம் மகா, ரவுடி பேபி, விஜய் சந்தர் போன்ற படங்களும் இயக்குனர் கண்ணன் உடன் ஒரு படமும் என நான்கு படங்களை வைத்திருக்கிறார். தமிழில் மட்டுமன்றி தெலுங்கில் பிசியாக இருந்து கொண்டிருக்கும் ஹன்சிகா, தற்போது பார்ட்னர், 105 மினிட்ஸ், மை நோம் சுருதி போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இப்படி ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் ஹன்சிகா, எதை செய்தால் படம் குவியும் என்பதை சரியாக புரிந்து கொண்டு அதை கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் ஹன்சிகா நடிக்கும் படங்கள் இனி வரும் நாட்களில் வரிசை கட்ட போகிறது.

Next Story

- Advertisement -