ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மார்கெட்டே இல்லாமல் ஓவர் ஆட்டம் போடும் நடிகை.. தலைக்கேரிய திமிரு!

பட வாய்ப்புக்கு திண்டாடி வரும் இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என பிரபல நடிகை கூறி வருகிறார். இதனால் பெரும் குழப்பத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள். என்னதான் பன் பரோட்டா மாதிரி இருந்தாலும் இப்படியா செய்வது.

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். ஹன்சிகா மஹா திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், சம்பளத்தை அதிகப்படியாக வாங்கி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம், தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்காமல் உள்ளார். சொந்தமாக யூடியூப் சேனல் ஓபன் செய்து அதில் வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

மேலும் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்னர் திரைப்படத்திலும் நடித்துள்ள ஹன்சிகா இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹன்சிகா, சத்யராஜ், மீனா, ராம்கி, ராய்லட்சுமி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கும் ரவுடி பேபி த்ரில்லர் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரையும் ஹன்சிகா வெளியிட்டார்.

இதனிடையே ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் ஜூலை 27 ஆம் தேதி மஹா திரைப்படம் வெளியாக உள்ளது. யூ .ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனிடையே இத்திரைப்படத்தை தொடர்ந்து ஹன்சிகா, மீண்டும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனது சம்பளதை ஒன்றரை கோடி வரை உயர்த்தியுள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தனக்கென தனி கேரவன் வசதி, சூட்டிங்கில் நடிக்கும்போது பல கட்டுப்பாடுகள் என ஹன்சிகா ஓவராக செயல்படுவதாக கோலிவுட் வட்டாரத்தில் கழுவி ஊற்றுகின்றனர்.

இப்படி ஓவர் திமிர் பண்ணும் ஆட்டிட்யுடால் அடுத்து கையில் இருக்கும் 1, 2 படத்தையும் இழக்கும் அபாயத்தில் இருக்கிறார் ஹன்சிகா. அவர் முன்னணி நடிகையாக 80 லட்சம் வரை சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது மார்கெட் இல்லாத போது ஒன்றரை கோடி வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News