ஹமாம் சோப் விளம்பர அம்மாவா இது? இந்த வினய் படத்துல நடிச்சிருக்காங்க, ஆனா யாருமே கவனிக்கல!

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக மீம்ஸ் யாரைப்பற்றி என்றால் அது ஹமாம் விளம்பரத்தில் நடித்த மேகா ராஜன் என்ற நடிகையை பற்றித்தான். அவர் புகைப்பிடிக்கும் புகைப்படம் வெளியாகி பயங்கர வைரல் ஆகிவிட்டது.

ஹமாம் சோப் விளம்பரத்தில் பெண்பிள்ளைகளுக்கு நல்லது சொல்லும் அம்மாவாக வலம் வந்துவிட்டு திடீரென இணையதளங்களில் புகைப்பிடிக்கும் போட்டோக்கள் வெளியானால் சும்மா இருப்பார்களா நெட்டிசன்கள்.

mekha rajan
mekha rajan

தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு வச்சு செய்து வருகின்றனர். ஆனால் ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்துள்ள மேகா ராஜன் ஏற்கனவே வினய் ஹீரோவாக நடித்துள்ள ஒரு படத்தில் துணை நடிகையாக வந்துள்ளார்.

அதுதான் ஜெயம் கொண்டான். வினய், விவேக், பாவனா, சரண்யா மோகன் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் நண்பர்களின் மனைவிகள் ஒருவராக நடித்திருப்பார் மேகா ராஜ்.

hamam-soap-fame-megha-rajan-in-jayam-kondan-movie
hamam-soap-fame-megha-rajan-in-jayam-kondan-movie

இவ்வளவு நாட்கள் ஹமாம் விளம்பரம் பார்த்தும் அவர் இந்த படத்தில் நடித்த ஞாபகமே பலருக்கும் வந்திருக்காது. ஒருவேளை அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்பதால் கவனம் பெறாமல் போய் விட்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் ஹமாம் விளம்பரங்களில் நிறைய மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாறிவிட்டது. அதனால் என்ன, ஒரே ஒரு சிகரெட் பிடிக்கும் போட்டோ தான், மொத்த மீடியாவையும் அலற விட்டுடாறே.

- Advertisement -spot_img

Trending News