சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

40% ஷேர்க்கு ஆதிரையை அடமானம் வைக்கும் குணசேகரன்.. அப்பத்தாவின் முடிவு என்னவாக இருக்கும்

சீரியல் அப்படினா அது எதிர்நீச்சல் மட்டும் தான் அப்படிங்கிற அளவுக்கு நம்பர் ஒன் இடத்தைப் பெற்றிருக்கிறது. தற்போது ஆதிரை திருமணத்திற்காக ஒரு பெரிய போர்க்களமே நடைபெற்று வருகிறது. ஆனால் அந்தப் பிரச்சினைகளில் அப்பத்தாவை காண முடியவில்லை. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நேற்று அவர் கொடுத்த என்ட்ரி வேற லெவல்ல இருந்தது.

இதுவரை ஆதிரை கல்யாணத்துக்காக குணசேகரை எதிர்த்து நின்று பேசியது ஜனனி மட்டும் தான். ஆனால் இப்பொழுது அப்பத்தா வந்த பிறகு இதைப் பற்றி நேரடியாக குணசேகரனிடம் பேசுகிறார். நீ உன் இஷ்டப்படி ஆதிரைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. அவர் மேஜரான பொண்ணு அவ நெனச்சவனோட தான் வாழ முடியும். இதற்கு நீ தடையாக இருந்தால் உனக்கு தான் பிரச்சனை ஏற்படும் என்று அப்பத்தா சொல்கிறார்.

Also read: மூர்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே போகும் ஜோடி

ஆனால் குணசேகரன் இதற்கெல்லாம் மசிர ஆளே கிடையாது. அதனால அவர் எப்போதும் போல ஆதிரை கல்யாணம் ஏன் விருப்பப்படி தான் நடக்கும். யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்கிறார். பின்பு அப்பத்தா ஆதிரையின் எதிர்காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு குணசேகரன் இடம் கொஞ்சம் நல்ல விதமாக இந்த கல்யாணத்தை நிறுத்திடு என்று சாந்தமாக சொல்கிறார்.

இதை கேட்ட குணசேகரன் சரி அப்பத்தா நீ சொல்ற மாதிரியே இந்த கல்யாணத்தை நிப்பாட்டுறேன் என்று கூறுகிறார். இதை கேட்ட அங்கே இருந்தவர்கள் மட்டுமில்லாமல் நமக்குமே பெரிய ஆச்சிரியத்தை கொடுக்கிறது. ஆனால் அவ்வளவு சீக்கிரமாக குணசேகரன் இறங்கி போவது கிடையாது. இதற்கு பின்னணியில் ஏதோ உள்குத்து மட்டும் இருக்குது என்று தெரிகிறது.

Also read: கலாச்சாரத்தை சீர்குலைக்கும் ஈரமான ரோஜாவே 2.. லாஜிக்கே இல்லாமல் ஏழரை கூட்டும் சீரியல்

அது என்னவாக இருக்கும் என்று எல்லாருக்குமே தெரியும். அப்பத்தாவிடம் இருக்கும் 40% ஷேர் தான். குணசேகரன் ஆதிரை திருமணத்தை வைத்து அப்பத்தாவை பகடைக்காயாக யூஸ் பண்ண போகிறார். அதாவது இந்த கல்யாணத்தில் நான் நிறுத்துகிறேன். எஸ்கேஆர் குடும்பத்துடன் சம்பந்தமும் வைத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும் என்று செக் வைக்கப் போகிறார்.

இதற்கு பிறகு அப்பத்தா இதை எப்படி டீல் பண்ண போகிறார். கண்டிப்பாக அந்த 40% ஷேர் குணசேகரிடம் கொடுக்க மாட்டார். பின்பு குணசேகரனை எப்படி மடக்கி ஆதிரை நினைச்சபடி திருமணத்தை செய்து முடிக்க போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்

- Advertisement -

Trending News