கலாச்சாரத்தை சீர்குலைக்கும் ஈரமான ரோஜாவே 2.. லாஜிக்கே இல்லாமல் ஏழரை கூட்டும் சீரியல்

விஜய் டிவியில் டிஆர்பியை அதிகரிக்க செய்வது அதில் வரும் சீரியல்கள் தான். அந்த வகையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலை ரசிகர்கள் ஆர்வமாக தினமும் பார்த்து வருகிறார்கள். இதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலித்தவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல், ஒரே வீட்டில் இருக்கும் வேற ஒருவரை கல்யாணம் செய்து அதன் பின் வரும் சூழலை எதிர்கொள்வதை இந்த நாடகத்தின் கதையாகும்.

இன்றைய ப்ரோமோ படி காவியாவையும், பார்த்திபனையும் நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்று பார்த்திபனின் அத்தை பக்கத்து வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களையும் வீட்டுக்கு வர சொல்கிறார். பின்பு அங்கே இருக்கும் காவியாவை எல்லாரும் முன்னாடியும் உனக்கு பார்த்திபனை பிடிக்காது என்று கோர்ட்டில் விவாகரத்து வேண்டும் என்று கேட்டிருக்கிறாய்.

Also read: பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது ஹீரோ.. டம்மி பீஸ் ஆகும் கோபி

இப்படி இருக்கும்போது பார்த்திபன் கட்டின தாலி மட்டும் கழுத்துல எதுக்கு அது உனக்கு தேவை இல்லை கழட்டி குடு என்று தேவி கேட்கிறார். அதற்கு அங்கிருந்த பார்த்திபனின் அப்பா, அக்கா அதெல்லாம் வேண்டாம் அது பெரிய பாவம் இந்த மாதிரி செய்யாத என்று கூறுகிறார். உடனே தேவி, பார்த்திபன் நான் செய்யப் போகிறது தப்பா இல்லையென்றால் உனக்கு அந்த தாலியை அவ கழுத்துல அப்படியே இருக்கட்டும் என நினைக்கிறாயா என்று பார்த்திபனிடம் கேட்கிறார்.

அதற்கு பார்த்திபன், என்னை விரும்பாதவள் நான் கட்டின தாலியை விரும்ப மாட்டாள் அதனால் அவளுக்கு அது தேவையில்லை என்று பார்த்திபன் கூறுகிறார். இதைக் கேட்ட காவ்யா என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சிபூர்வமாக நின்று கொண்டிருக்கிறாள். ஆனால் காவியா, பார்த்திபன் தாலியை கழட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று மனதளவில் தவித்துக் கொண்டிருக்கிறார். பிறகு காவியா அந்த தாலியை கழட்டி அங்கு இருந்த செம்புவிற்குள் போடுகிறாள்.

Also read: சக்காளத்தி முன் கெத்து காட்டிய பாக்கியலட்சுமி.. கிழித்து தொங்கவிடப்பட்ட ராதிகா

ஆனால் என்னதான் சீரியலாக இருந்தாலும் ஒரு லாஜிக்கும் இல்லாமல் கதையைக் கொண்டு போவது கொஞ்சம் மூஞ்சியை சுளிக்க வைக்கிறது. ஏனென்றால் இந்த நாடகத்தில் ஆரம்பத்தில் காதலிப்பது ஒருவரை கல்யாணம் செய்வது வேறு ஒருவரை என்று சம்மந்தமே இல்லாமல் கதையை கொண்டு வந்தார்கள்.

பிறகு இப்பொழுது தாலி விஷயத்தை பார்க்கும்போது இவர்கள் மனதில் என்னதான் நினைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களுக்கு என்ன இது தாலியா அல்லது பாசி மணியா நினைத்ததும் கழட்டி தூர போடுறதுக்கு. இந்த மாதிரியெல்லாம் பார்க்கும்போது சமுதாயத்தின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாக இந்த நாடகத்தின் கதை அமைகிறது.

Also read: சனியனை தூக்கி பனியனில் போட்டு கொண்ட பாண்டியன் குடும்பம்.. சகுனி வேலையை கச்சிதமாக செய்த மீனாவின் அப்பா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்