கவுண்டமணியுடன் ஒருபோதும் இணையாத டி ராஜேந்தர்.. பின்னால் இருக்கும் பலே காரணம்

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணி ஒரு காலத்தில் தன் நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து கொடிகட்டி பறந்தவர். இன்றும் கூட அவர் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னுடைய கவுண்டர் வசனங்கள் மூலம் திரையுலகை ஆட்டிப் படைத்தார்.

அப்படி பிரபலமாக இருந்த கவுண்டமணி பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் டி ராஜேந்தர் இயக்கத்தில் மட்டும் அவர் இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்தது கிடையாது. இதற்கு ஒரு வலுவான காரணமும் சொல்லப்படுகிறது.

என்னவென்றால் கவுண்டமணி சாதாரணமாக படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் நக்கல், நையாண்டி செய்து கொண்டு இருப்பார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் கவலைப்படாமல் அவர்களை கிண்டல் செய்வார். அதனால்தான் அவரை பலரும் நக்கல் மன்னன் என்று கூறுகின்றனர்.

ஆனால் அடுக்குமொழி வசனங்களால் பலரையும் கவர்ந்த டி ராஜேந்தர் அப்படி கிடையாது. அனைவரிடமும் ஒரு வித மரியாதையுடன் தான் பேசுவார். அப்படியிருக்கும் இவருக்கும், கவுண்டமணிக்கும் எப்படி ஒத்துப்போகும். அதனால்தான் அவர்கள் இருவரும் இதுவரை சேர்ந்து பணி புரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் டி ராஜேந்தர் நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளை படமாக்குவாராம். அந்த சமயத்தில் அந்தக் காட்சிகளை ஷுட் செய்வதற்காக சம்மந்தப்பட்டவர்களை உடனே ஸ்பாட்டுக்கு வர சொல்லி விடுவாராம். பிஸியாக இருக்கும் நடிகர்களிடம் இது சாத்தியமாகாது.

அதிலும் கவுண்டமணி போன்று பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகருக்கு இது சரிப்பட்டு வராது. அதன் காரணமாகவும் இவர்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனால்தான் டி ராஜேந்தர் தன்னை சுற்றி சிலரை வைத்துக் கொண்டு அவர்களையே அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

Next Story

- Advertisement -