சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

யோகிபாபுவிற்கு வில்லனாகும் கௌதம் மேனன்.. இப்படியும் ஒரு கூட்டணியா.? நம்பவே முடியல!

மனித உறவுகளை மையப்படுத்தி தரமான அழுத்தமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் தங்கர் பச்சானின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. சமீபத்தில் இயக்குனர் தங்கர் பச்சன் அவரது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக வைத்து இயக்கிய ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் முதன்முதலாக இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இருவரும் இணைந்து இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு மிக முக்கியமாக கருதும், படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜிவி பிரகாஷ் ஏற்றுள்ளார். வைரமுத்து படத்திற்கான பாடல்களை எழுதுகிறார். NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தங்கவேல் கலையை அமைக்கிறார்.

படத்தை VAU மீடியா என்டர்டைன்மென்ட் வீரசக்தி தயாரிக்கிறது. ‘கருமேகங்கள் கலைகின்றன’ என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று கும்பகோணத்தில் துவங்கி இரண்டு கட்டங்களாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் கதையை கேட்டதும் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் கௌதம் மேனன் இருவரும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளனர். இதில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன் ஆகிய மூவரின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கௌதம் மேனன், யோகிபாபுவிற்கு வில்லனாக நடிக்கவுள்ளார். எனவே இந்த மூவரின் கூட்டணியை இதுவரை யாரும் யோசிக்காத நிலையில் வித்யாசமான காம்போவில் படத்தை உருவாக்கும் தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.

yogi-babu-new-flim-cinemapettai
yogi-babu-new-flim-cinemapettai
- Advertisement -

Trending News