தந்தை பெயரை காப்பாற்ற தவறிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. கில்லி ஸ்ரீகா சாரின் பல வருட மன குமுறல்

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு அணியில் வாய்ப்பு என்ற ஒரு நிலை உருவாகி உள்ளது. இப்பொழுது பல இளம் வீரர்கள் உருவாகும் நிலையில் இந்திய அணியில் யாரை தேர்வு செய்வது என்ற ஒரு குழப்பமே இருந்து வருகிறது.

ஆனால் பழைய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாரிசுகள் இந்திய அணியில் சரி வர வாய்ப்பு கிடைக்காமல், தங்களது கிரிக்கெட் கேரியரை தொலைத்துள்ளனர்.அப்படி இந்திய அணியில் தோல்வியுற்ற 6 வாரிசுகள்.

ரோஜர் பின்னி – ஸ்டுவர்ட் பின்னி: ரோஜர் பின்னி இந்திய அணியில் கபில்தேவ் தலைமையில் விளையாடியவர். இவர் ஒரு ஆல்ரவுண்டர் அதன் பின்னர் இவரது வாரிசாகிய ஸ்டுவர்ட் பின்னி இந்திய அணியில் வாய்ப்பு பெற்று விளையாடி வந்தார். ஆனால் சரிவர இவர் திறமையை காட்டாத நிலையில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

சுனில் கவாஸ்கர் -ரோகன் கவாஸ்கர்: லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கரின் வாரிசு தான் ரோகன் கவாஸ்கர். இவரும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதன் பின் அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

கிருஷ்ணமாச்சாரியா ஸ்ரீகாந்த்- அனிருத்தா ஸ்ரீகாந்த்: ஸ்ரீகாந்தின் மகன் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடினார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அவர் பையனுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை. இதனால் நீண்ட நாட்களாக மன வருத்தத்தில் இருக்கிறார் ஸ்ரீகா சார்.

லாலா அமர்நாத் – சுரேந்தர் அமர்நாத்: லாலா அமர்நாத்துக்கு இரண்டு வாரிசுகள் மொஹீந்தர் அமர்நாத் மற்றும் சுரேந்தர் அமர்நாத்.
இதில் சுரேந்தர்அமர்நாத் சோபிக்கவில்லை.

விஜய் மஞ்சுரேக்கர் – சஞ்சய் மஞ்சுரேக்கர்: இவர்கள் இருவருமே சோபிக்கவில்லை என்று கூறலாம். ஆனால் தந்தை விஜய் மஞ்சுரேக்கர் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் குறைவு. ஆனால் இப்பொழுது கிரிக்கெட் போட்டியில் நிறைய காம்படிஷன் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்