100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட தனுஷின் 5 படங்கள்.. சைக்கோவாக கைதட்டல் வாங்கிய காதல் கொண்டேன்

தனுஷ் சினிமாவில் நுழைந்த காலத்தில் இவரை அதிகமானோர் கேலியும் கிண்டலும் செய்திருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டும் இவரது பயணங்கள் தொடர்ந்து வந்ததால் இப்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது. அப்படி வெற்றி பெற்ற ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

துள்ளுவதோ இளமை: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு டீன் ஏஜ் திரைப்படமாக துள்ளுவதோ இளமை வெளிவந்தது.  இத்திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் தனுஷ், அபினய், ஷெரின்  ஆகியோர் நடித்தார்கள். இதில் தனுஷ் ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவராக நடித்திருப்பார். அத்துடன் ஒவ்வொரு மாணவர்களின் குடும்பங்களில் நடக்கும் சொந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வீடுகளை விட்டு தப்பித்து இவர்களாகவே ஒன்றாக வாழ முடிவு செய்யும் கதையாக இப்படம் அமைந்திருக்கும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தது. இத்திரைப்படம் திரையரங்களில் 125 நாட்களுக்கு மேல் ஓடியது.

காதல் கொண்டேன்: செல்வராகவன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு காதல் கொண்டேன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால்,  சுதீப் சாரங்கி மற்றும் நாகேஷ் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதில் தனுஷின் கதாபாத்திரம் எதிர்மறையாகவும் மற்றும் காதலுக்காக எதையும் செய்யக்கூடிய சைக்கோவாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.  இந்தப் படத்தில் இவர் நடிப்பால் அதிகமான  கைத்தட்டல்களை பெற்றார்.  இதன் மூலம் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சேர்ந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இத்திரைப்படம் 170 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

திருடா திருடி: சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு திருடா திருடி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், சாயாசிங், கருணாஸ், மாணிக்க விநாயகம் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடித்தார்கள். இதில் தனுஷ், வாசு என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகவும், பொறுப்பற்றவராகவும் நடித்திருப்பார். பின்பு இவருக்கு ஏற்பட்ட கால சூழ்நிலைகளுக்குப் பிறகு தன் குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று பொறுப்புள்ள மகனாக இவரின் கதாபாத்திரத்தை அழகாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வணிக ரீதியாக அதிக லாபத்தை கொடுத்தது. இத்திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

திருவிளையாடல் ஆரம்பம்: பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ஸ்ரேயா சரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் நடித்தார்கள். இப்படத்தில் தனுஷ், ஸ்ரேயாவை காதலிக்கிறார். இதை தெரிந்து கொண்ட பிரகாஷ்ராஜ் காதலுக்கு எதிராக சில விஷயங்களை செய்வார். பிறகு தனுஷுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே ஏற்படும் எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டு படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்க செய்வார்கள். இத்திரைப்படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

யாரடி நீ மோகினி: மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கார்த்திக் குமார் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்தார்கள். இதில் தனுஷ், வாசுதேவன் எனும் கதாபாத்திரத்தில் ரகுவரனின் மகனாக நடித்து நயன்தாராவை காதலிக்க ஆரம்பிக்கிறார். பிறகு இவரின் நண்பருக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் ஏற்பாடு நடைபெறுவதை தெரிந்து கொண்டார். பின்பு நயன்தாராவிடம் இருந்து விலகு நினைக்கும் இவருக்கு காதல் வெற்றியடைய செய்யும் வகையில் திரைப்படம் அமைந்திருக்கும். இந்த படம் தனுஷ்க்கு அந்தாண்டின் அதிக அளவில் வசூலை கொடுத்த தமிழ் படமாக அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்