Connect with us

Cinemapettai

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

tamil-field-out-actors

Entertainment | பொழுதுபோக்கு

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென அதல பாதாளத்திற்கு சென்று நடிகர் நடிகைகள் கதை ஏராளம் உண்டு. அந்த வகையில் சில நடிகர்களைப் பற்றி பார்ப்போம்.

மைக் மோகன்:

mic-mohan-cinemapettai-01

mic-mohan-cinemapettai-01

ரஜினி, கமல் என அனைவரின் வெற்றிகளையும் சர்வசாதாரணமாக ஓரங்கட்டி முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். இத்தனைக்கும் மாஸ், டான்ஸ், ஆக்ஷன் என எதுவும் இல்லாமல் வெறும் காதல் திரைப்படங்கள் மூலம் மட்டுமே பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தார். இவருடன் நடித்த நடிகை ஒருவர் மோகன் கிடைக்காத விரக்தியில் அவருக்கு எயிட்ஸ் இருக்கிறது என பரப்பி அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

டாப் ஸ்டார் பிரசாந்த்:

prasanth

prasanth

தல தான் அடுத்த சூப்பர் ஸ்டார், தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தற்போது தான் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் அவர்கள் இருவரையுமே ஓவர்டேக் செய்து ஒற்றையாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தான் பிரசாந்த். தொடர்ந்து வீட்டு பிரச்சனை மற்றும் கதை தேர்வில் சொதப்பி தற்போது சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டார்.

ஷாம்:

shaam

shaam

இளம் கதாநாயகனாக காதல் திரைப்படங்களின் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்து ஓரளவு வெற்றி படங்களை கொடுத்து வந்த ஷாம், அதன்பிறகு பெரிய நடிகராக ஜொலிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி விட்டார். தற்போது கூட தெலுங்கு தமிழ் சினிமாக்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்:

srikanth

srikanth

ஆரம்பமே அட்டகாசமாக தொடங்கி ஒரு சில ஹிட் படங்களை கொடுத்து வளர்ந்து வரும் நடிகராக மாறினார் ஸ்ரீகாந்த். ஆனால் யார் பேச்சைக் கேட்டு மாஸ் ஹீரோவாக மாறவேண்டும் என நினைத்தாரோ அப்போதே அவருக்கு அழிவு காலம் ஏற்பட்டு தற்போது சினிமாவே அவரை ஒதுக்கி வைத்து விட்டது.

அப்பாஸ்:

1990களின் இறுதி காலகட்டங்களில் பல இளம்பெண்களுக்கு கனவு நாயகனாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். சத்தமில்லாமல் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வெற்றி பெற்ற காலம் அது. அதன்பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்த அப்பாஸ் தற்போது கழிவறை கழுவும் மருந்து விளம்பரத்துக்கு சென்றதே அவரது தோல்விக்கு சான்று.

ராம்கி:

ramki-rajini

ramki-rajini

இவரும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து பின்னர் தோல்வி படங்களை கொடுத்து ஒதுக்கப்பட்டவர் தான். எப்படியோ பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

பாண்டியராஜன்:

pandiarajan

pandiarajan

உயரத்துக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை ஆணித்தரமாக தமிழ் சினிமாவுக்கு நிரூபித்தவர். இன்றும் இவரது ஆன் பாவம் போன்ற படங்களெல்லாம் இளைஞர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு உள்ளது. இருந்தும் காய்கறி முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதை போல சொதப்புனா சினிமாவை விட்டு வெளியே சென்றுதான் ஆகவேண்டும் என ஆகிவிட்டது நிலைமை.

ராமராஜன்:

ramarajan-vijaysethupathy

ramarajan-vijaysethupathy

எம்ஜிஆருக்கு பிறகு மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவருக்கும் அரசியல் ஆசை வந்து தன்னுடைய சினிமா கேரியருக்கு வேட்டு வைத்துக் கொண்டார். குணச்சித்திர நடிகர் வேடங்களில் பல வாய்ப்புகள் வந்தாலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இப்போதும் அடம்பிடித்த வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top