நல்லவேல வலிமை ரிலீஸ் ஆகல.. முதல் முறையா அஜித் படம் லேட் ஆவதை கொண்டாடும் ரசிகர்கள்

கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த கொரோனா தொற்று பொது மக்களை மட்டுமல்லாமல் சினிமா உலகைச் சேர்ந்த பலரையும் போட்டு ஆட்டி வருகிறது. இதனால் கோடிக்கணக்கில் பணத்தை போட்டு எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் வெளியாக முடியாத சூழலில் சிக்கித் தவித்து வருகிறது.

சில மாதங்களாக இயல்பு நிலையில் இருந்த இந்த கொரோனா பாதிப்பு தற்போது உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய திரைப்படமாக இருப்பது நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் இடையில் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது தான் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் மீண்டும் கொரோனா வந்து அதை கெடுத்து விட்டது.

இதனால் படத்தை கொண்டாட ஆர்வத்துடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். வலிமை திரைப்படத்தால் விரக்தியில் இருந்த அஜீத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அவரின் அடுத்த படமான ஏகே 61 படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தத் திரைப்படத்தையும் வலிமை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் வலிமை திரைப்படத்தைப் போல் இல்லாமல் இந்தத் திரைப்படத்தை மிக விரைவாக எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் அனைத்தும் படு ஜோராக நடந்து வருகிறது. இதனால் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அதோடு வலிமை திரைப்படமும் இன்னும் சில மாதங்களில் வெளியாகிவிடும். ஒருவகையில் இந்த திரைப்படம் தாமதமாக வெளியாவதும் ஒரு நல்லது தான். இந்த வருடம் அஜித்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்