செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 18, 2025

16 வருடத்திற்கு பின் அஜித் கூட்டணியில் இணைந்த முரட்டு வில்லன்.. பேரு டேமேஜ் ஆகாம இருந்தா சரி

நேர்கொண்ட பார்வை திரைப் படத்திற்கு பிறகு அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த இரு படங்களை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார்.

முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தை விரைந்து முடிக்க தேவையான அனைத்து வேலைகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க தமிழில் பிரபல நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அஜித்துடன் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 16 வருடம் கழித்து மீண்டும் அஜித் கூட்டணியில் இணைகிறார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரகாஷ்ராஜ், அஜித்துடன் நடிக்க இருக்கிறார். இது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தாலும் சமீப காலமாக பிரகாஷ்ராஜ் மீது நிறைய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதாவது அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வருவது கிடையாதாம்.

இதனால் படப்பிடிப்புகள் தாமதமாகும் நிலையும் ஏற்படுகிறதாம். இப்படி அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு இருப்பதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இருந்தாலும் தற்போது பிரகாஷ்ராஜ் கைவசம் கணிசமான திரைப்படங்கள் இருக்கின்றன. மேலும் அவர் அரசியல் சார்ந்த கருத்துகளை பேசியதால் சினிமாவில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

இதுவும் அவர் படப்பிடிப்பில் சரியாக பங்கேற்காததற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவரின் மீது இத்தனை குற்றச் சாட்டுகள் இருக்கும் பொழுது வினோத் எப்படி அவரை அஜித் படத்திற்கு புக் செய்தார் என்று அஜித்தின் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஏற்கனவே வலிமை திரைப்படம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வராமல் இருக்கிறது. இதில் பிரகாஷ் ராஜை புக் செய்து படப்பிடிப்பு இன்னும் தாமதமானால் என்ன செய்வது என்றும் படம் தீபாவளிக்கு வெளியான மாதிரி தான் என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Trending News