தொடர்ந்து 2 படம் ஃபிளாப்.. ஆனாலும் காசுக்காக கதை எழுத மாட்டேன்

படம் எடுக்கத் தெரியவில்லை, சைக்கோ என்று பல விமர்சனங்களுக்கு இடையில் தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்தவர் இயக்குனர் செல்வராகவன். இன்று முன்னணி நடிகராக இருக்கும் இவரின் தம்பி நடிகர் தனுஷுக்கு  நடிப்பு சொல்லிக் கொடுத்த பெருமைக்குரியவர்.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் அவரின் முந்தைய திரைப்படத்தை விட பல மடங்கு வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும்.

பல காதல் திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் புதுப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தன் ரசிகர்கள் பலரையும் மிரள வைத்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை விட அவரின் படத்திற்கு ரசிகர்களிடையே ஒரு தனி ஈர்ப்பு உண்டானது.

அவர் ஒவ்வொரு படத்தின் கதையையும் எழுதுவதற்கு முன்பு தன்னையே அந்த கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டு தான் எழுத ஆரம்பிப்பதாக  பலமுறை கூறியுள்ளார். மேலும் எனக்கு பிடித்தால் மட்டுமே கதை எழுதுவேன், யாருக்காகவும் மாற்ற மாட்டேன், பணம் எனக்கு முக்கியமில்லை என்ற கொள்கை உடையவர். இதுவே இவரின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது உண்டு.

செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுமையை கொண்டிருக்கும். அவரின் திரைக்கதைகள் மக்களால் நம்பமுடியாத ஆனால் உண்மையான விஷயங்களாக இருக்கும். அந்த அளவிற்கு அவர் திறமையானவர், அவர் ஓவர் அப்டேட் என்று தயாரிப்பாளர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்கள் அவரின் புதுமையான திரைக்கதைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தற்போது செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2, நானே வருவேன் போன்ற படங்களை இயக்கி வருகிறார். இரண்டாம் உலகம், என்ஜிகே போன்ற படங்கள் பிளாப் கொடுத்தாலும் காசுக்காக கதை எழுத மாட்டேன் என்பதில் தீவிரமாக உள்ளார் செல்வராகவன்

இதுதவிர சாணி காகிதம், பீஸ்ட் போன்ற திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளன. ஒரு இயக்குனராக அவரின் திறமையை பார்த்த நாம் ஒரு நடிகராக அவரின் மற்றொரு பரிமாணத்தை விரைவில் பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்