இப்படி கீழ்தரமா படம் எடுப்பாருன்னு நினைக்கல.. வெற்றிமாறனை காட்டமாக விமர்சித்த பிரபலம்

தமிழ் சினிமாவில் பெயருக்கு ஏற்றார்போல் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பல முன்னணி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவுக்கு ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இவர் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இவர் இயக்கிய ஆடுகளம், அசுரன் போன்ற பல திரைப்படங்கள் தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதிலும் நடிகர் தனுஷின் வெற்றிப் பயணத்தில் இவருக்கு முக்கிய இடம் இருக்கிறது. இவர் தற்போது விஜய்சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்க இருக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பிஸியான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் குறித்து சன் டிவி புகழ் டாப் 10 சுரேஷ் ஒரு காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை.

இந்த படத்திற்கு நிறைய கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதிலும் ஹீரோயின் கூட கெட்ட வார்த்தை பேசுவார். அது குறித்து பேசிய சுரேஷ், வெற்றிமாறன் ஒரு அருமையான இயக்குனர். ஆனால் அந்தப் படத்தில் இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களை வைப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மேலும் இதுபோன்ற கெட்டவார்த்தைகளை பலரும் கைத்தட்டி, விசிலடித்து ரசிப்பது ரொம்ப ஆதங்கமாக இருக்கிறது. தமிழ் திரையுலகமும், சமுதாயமும் இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. இதை நான் வெற்றி மாறனிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்று சுரேஷ் மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Next Story

- Advertisement -