Tamil Cinema News | சினிமா செய்திகள்
தலை முடியால் சிக்கிய பிரபல நடிகைகள்.. போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம்
பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிக்கு செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது சமீபகாலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது. பார்ட்டி கலாச்சாரம் தற்போது பெருநகரங்களில் பெருகி வருகிறது. சினிமா பிரபலங்களுக்கிடையே இதற்கு பெரிய வரவேற்பும் உள்ளது.
போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தற்காக கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின், 4 மாத சிறைவாசத்துக்கு பின்னர் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

sanjana-galrani-cinempettai
இதனால் இந்த வழக்கில் அவர்கள் இருவர் மீதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2018ல் வெளியான மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ், போதைக்கு அடிமையானவராக நடித்திருப்பார்.
அந்த காலம் தொட்டு இன்று வரை நடிகைகள் போதைக்கு அடிமையாக இருப்பது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. போதைக்கு அடிமையான இரு நடிகைகள் சிறைத்தண்டனை பெற்றிருப்பது சினிமா துறையினரை அதிர்ச்சியடைய செய்தது நினைவிற்குறியது.
