மொத்தமாக முடிவு கட்டப் போகும் உதயநிதி ஸ்டாலின்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க

நமக்கு எந்த மாதிரி நடிப்பு வரும் அந்த மாதிரி கதைகள் மட்டுமே நமக்கு செட்டாகும் என்று ஆரம்பத்திலிருந்தே அந்த மாதிரி கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடியாக இருந்தவர், இப்பொழுது நடிப்புக்கு முடிவுகட்டும் முடிவில் இருக்கிறாரா என்பதில் ஒரு பெரிய சந்தேகம் நிலவி வருகிறது.

15 படங்களில் நடித்தாலும் அவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கையில் எடுத்தது என்னமோ நகைச்சுவை கலந்த கதாபாத்திரம்தான். ஆனால் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து மின்னினார்.

இப்பொழுது எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். கடைசியாக எடுத்துக்கொண்டிருக்கும் படத்திற்குப் பின், வேறு எந்த ஒரு படங்கள் நடிக்கும் முடிவில் இல்லாதது போன்று தெரிகிறது.

தற்போது இவர் கைவசம் கண்ணை நம்பாதே, நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல் போன்ற படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கடைசியாக உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படம் மாமன்னன். அந்த படத்திற்கு பின் முழுநேர அரசியல்வாதியாக இறங்கும் திட்டம் அவருக்கு இருப்பதாக தெரிகிறது. அதனால் வேறு எந்த படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை.

இவரைப்போலவே இவர் தந்தை முக ஸ்டாலின் 1-2 படங்களில் தோன்றினாலும் . அவர் தந்தை கலைஞருடன் முழு நேர அரசியலில் ஈடுபட்டு படத்தில் நடிப்பதை தவிர்த்தார். அதைப்போலவே உதயநிதி ஸ்டாலினும் சினிமா கேரியருக்கு முழுக்கு போட போகிறார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Next Story

- Advertisement -