ஜிபி முத்து பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு கிண்டலடித்த பிரபல நடிகர்! ரிவீட் அடிச்ச நெட்டிசன்கள்

டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து. தப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ளப் போவதாக நம்பத்தகுந்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் பிக்பாஸ் குழுவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக விளங்கும் நடிகர் சதீஷ், ஜி பி முத்துவை பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் கடிதத்தை மட்டும் படிக்க விடாதீர்கள்! ஏனென்றால், என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்க, நாற பயலுகளா, செத்த பயலுகளா என்று சொல்லிவிடுவார்’

GB-muthu-cinemapettai
GB-muthu-cinemapettai

என ஜி பி முத்துவை சதீஷ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கிண்டலடித்தார். இவருக்கு நெட்டிசன்கள், படத்துல கூட இந்த மாதிரியான காமெடி பண்றது இல்லையே என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

இப்படி நடிகர் சதீஷ்ஸுக்கும் நெட்டிசன்களுக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சிலர் சதீஷ்க்கு ஆதரவாகவும், வேறு சிலர் ஜி பி முத்துக்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்