வலிமை பட வில்லனுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. வைரலாகும் புகைப்படம்

தற்போது தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கார்த்திகேயா. இவரது காட்டில் அடைமழை என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு இவரது கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இதுவரை தெலுங்கில் மட்டுமே பிசியாக நடித்து வந்த கார்த்திகேயா தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரேமதோ மீ கார்த்திக் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தான் கார்த்திகேயா. இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஆர்எக்ஸ் 100 (RX 100) படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்துக்கு பின்னர் கார்த்திகேயாவிற்கு வரிசையாக ஏராளமான படங்கள் குவிய தொடங்கியது.

அந்த வரிசையில் ஹிப்பி, குணா 369, நானி’ஸ் கேங் லீடர், 90 ML, சாவு கபரு சல்லகா என அடுத்தடுத்து புதிய தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இவரது படங்கள் மட்டுமின்றி கார்த்திகேயாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் தல என அழைக்கப்படும் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வலிமை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவிற்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

valimai-karthikeya
valimai-karthikeya

வலிமை படத்தில் கார்த்திகேயா ஒரு பவர்ஃபுல்லான வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளதால் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்