எம்ஜிஆரை பழிவாங்க கலைஞர் செய்த செயல்.. அமைதி காத்த எம்ஜிஆர் காரணம் தெரியுமா?

திரையுலகை தாண்டி பொது வாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி எம்ஜிஆரும் கலைஞர் கருணாநிதியும் சிறந்த நண்பர்களாகவே விளங்கினார்கள். இவர்களின் நட்பை பலர் பாராட்டி உள்ளனர். கலைஞரும் எம்ஜிஆரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் தங்கள் திரைவாழ்க்கையை தொடங்கினார்கள்.

இருவரும் 1946 ஆம் ஆண்டு ராஜகுமாரி என்ற படத்தின் அரங்கில் தான் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அப்போது தொடங்கிய அவர்களின் நட்பு அவர்களின் புகழின் உச்சிக்கு செல்லும் வரை தொடர்ந்தது. எம்ஜிஆரை காண ஒரு கூட்டம் என்றால், கலைஞரின் புரட்சி வசனங்களை கேட்க ஒரு கூட்டம் என இருவருமே தமிழகத்தில் மிகப்பெரிய பிரபலங்களாக உருவெடுத்தார்கள்.

ஆனால் அது நீண்ட நாட்கள் நினைக்கவில்லை. ஆம் 1969 ஆம் ஆண்டு தனது 45 வது வயதில் கலைஞர் கருணாநிதி முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். அந்த சமயத்தில் கருணாநிதியுடன் இருந்தவர்கள் ஏற்படுத்திய பூசல் சிறிது சிறிதாக வளர்ந்து ஒரு கட்டத்தில் கலைஞரே எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கும்படி செய்தது.

இருப்பினும் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த நட்பு அப்படியே தான் இருந்தது. ஆனால் அவர்கள் இருவரின் உடன் இருந்த சில நபர்கள் அவ்வபோது அவர்களுக்குள் கலகம் மூட்டியபடியே இருந்தனர். அதன் காரணமாக ஒரு முறை கலைஞர் எம்ஜிஆரின் பெயரை சினிமாவில் கெடுக்க நினைத்தார்.

அதனால் எம்ஜிஆர் படங்கள் வெளிவரும் நேரத்தில் மட்டும் ஏதாவது ஒரு பிரச்சனை செய்து படத்திற்கு தடங்கல் ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ஒரு போஸ்டருக்கு ஒரு ரூபாய் என வரி விதித்தார். இருப்பினும் அமைதியாய் இருந்த எம்ஜிஆர் இது ஒரு சிறந்த திட்டம் என கலைஞரை பாராட்டினார். இத்தனை தடங்கல்களுக்கு இடையிலும் எம்ஜிஆர் நடிப்பில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் படம் போஸ்டரே இல்லாமல் வெளியாகி வெள்ளி விழா கண்டது.

எம்ஜிஆர் கலைஞர் ஆகிய இரு சிகரங்களும் சாகும் வரை நண்பர்களாகத்தான் இருந்தார்கள். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் அவர்கள் செய்யவில்லை. உடனிருந்தவர்களில் தூண்டுதலில் தான் செய்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்