Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டபுள் பேமெண்ட், ரெகுலர் சான்ஸ், வடிவேலு விரித்த வலை.. விவேக் குரூப்பை பிரிக்க போட்ட சதி

சக நடிகர்களின் வளர்ச்சியையும் பிடிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் வடிவேலு.

vadivelu-vivek

நகைச்சுவை என்றாலே நம் நினைவு வருவது இவர்களின் காமெடிகள் மட்டும்தான். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்கள் தான் விவேக் மற்றும் வடிவேலு. இந்நிலையில் விவேக் குரூப்பை பிரிக்க வடிவேலு செய்த மட்டமான வேலை கேட்பவருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

எளிமையான வாழ்க்கையில் இருந்து தன்னுடைய முயற்சியால் படிப்படியாக முன்னேற்றத்தை அடைந்தவர் தான் வடிவேலு. இவர் கடந்து வந்த பாதைகள் கடினம் என்பதால் ஒரு நிலைமைக்கு வந்ததற்கு பிறகு இவர் செய்யும் இத்தகைய செயல் இவரின் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது.

Also Read: விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்.. குக் வித் கோமாளியால் ஏற்பட்ட சங்கடம்

ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடிகளால் சிறந்து விளங்கியவர்கள் தான் விவேக் மற்றும் வடிவேலு. அவ்வாறு இருக்கையில் விவேக்கின் வளர்ச்சியை பொறுக்காது வடிவேலு அவரை போட்டியாக தான் நினைத்து வந்திருக்கிறார்.

தனித்தனி காமெடிகளில் கலக்கினாலும், இருவருக்கும் காமெடி குரூப்புகள் இருந்தன. இப்படியே சில காலம் போய்க் கொண்டிருக்கும் போது விவேக் குரூப் ஆட்களை எப்படியாவது தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார் வடிவேலு.

Also Read: ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

அவ்வாறு தன்னுடன் வேலை பார்க்கும் சக நடிகர்களுக்குமே பல குடைச்சல்கள் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி வந்தார். அப்படி பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன், கொட்டாச்சி போன்றவர்களுக்கும் இவர் வலை விரித்துள்ளார். இதைக் குறித்து தவசி படபிடிப்பில் என்னை நடிக்க விடாமல் வடிவேலு செய்ததாக கொட்டாச்சி இன்டர்வியூ ஒன்றில் தன் மனம் திறந்து கவலையை வெளிப்படுத்தினார்.

அவ்வாறு சக நடிகர்களின் வளர்ச்சியையும் பிடிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் வடிவேலு. ஒரு கட்டத்தில் இவரைப் பற்றி அறிந்தவர்கள், இவர் விரித்த வலையான டபுள் பேமெண்ட், ரெகுலர் சான்ஸ் எதையும் பொருட்படுத்த வில்லையாம். அவரவர் தன் மரியாதையை பெரிதாக நினைத்து இவரை பிரிந்து சென்று இருக்கின்றனர். அவ்வாறு விவேக்குக்கு வைத்த ஆப்பு இவரையே பதம் பார்த்துள்ளது என்றே கூறலாம்.

Also Read: கமலஹாசனிடமே ஆழம் பார்த்த சிம்பு.. தலையில் அடித்து உட்கார வைத்த உலகநாயகன்

Continue Reading
To Top