கமலஹாசனிடமே ஆழம் பார்த்த சிம்பு.. தலையில் அடித்து உட்கார வைத்த உலகநாயகன்

நடிகர் சிம்பு காட்டில் தற்போது வெற்றி மழை என்று தான் சொல்ல வேண்டும். அவர் தொட்டதெல்லாம் துலங்குகின்ற காலமாக இப்போது இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு சிம்பு தமிழ் சினிமாவிற்கு வேண்டவே வேண்டாம், அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர்களும் கோரிக்கை வைத்த நிலையில், அவருடைய கால்ஷுட்டுக்காக நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு சிம்புவின் கடின உழைப்புதான் ஒரு காரணம். தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சிம்புவை இன்னும் கொஞ்சம் உச்சம் தூக்கி விட்டது. பத்து தல திரைப்படத்திற்கு பிறகு சிம்புவுக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Also Read: திருந்தாத சிம்புவால் தயாரிப்பாளர் அனுபவிக்கும் கொடுமை.. எல்லாம் தெரிந்தும் கப்சிப்ன்னு இருக்கும் கமல்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதே நேரத்தில் சிம்பு கொரோனா குமார் மற்றும் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் கமிட் ஆகி பின்பு ஒதுங்கி விட்டார். தற்சமயம் சிம்புவின் கைவசம் இருப்பது எஸ் டி ஆர் 48 என்னும் பெயரிடப்படாத ப்ராஜெக்ட் தான், இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க, உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

நடிகர் சிம்பு இந்த படத்திற்காக சில பயிற்சிகளை எடுத்துக் கொள்ள சிங்கப்பூர் சென்று இருக்கிறார். அவர் திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பத்துதல திரைப்பட ரிலீசிற்கு பிறகு சிம்பு தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் இவரை தேடிச் செல்லும் தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடுகின்றனர்.

Also Read:உயிரை விட துணிந்த சிம்பு பட நடிகை.. ராகுல் காந்தியால் அரசியலில் ஜொலிக்கும் ஹீரோயின்

சிம்பு தன்னுடைய சம்பளத்தை 30 லிருந்து 40 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதனால் அவரை தேடி செல்லும் வாய்ப்புகளும் தட்டிக் கழிக்கப்பட்டு வருகின்றன. சம்பள உயர்வை பற்றி கமலஹாசனிடமும் பேசி இருக்கிறார் அவர். ஆனால் கமலஹாசனோ அவ்வளவு சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது, தற்போதைக்கு 20 கோடி சம்பளம் மட்டுமே பேசப்பட்டு ரிலீசுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.

விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு தன்னுடைய பேனரில் படம் பண்ண முழு மூச்சுடன் இறங்கி இருக்கிறார் கமல். இதில் சிம்புவுக்கு வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம், இதில் சம்பளத்தில் கறார் காட்டினால் வந்த வாய்ப்பும் போய்விடும் என்பதை புரிந்து கொண்ட சிம்பு, கமல் சொன்னதுக்கு சரி என்று சொல்லிவிட்டாராம். இருந்தாலும் மற்ற தயாரிப்பாளர்களிடம் சம்பள உயர்வில் உறுதியாக இருக்கிறாராம்.

Also Read:40 வருடமாக செய்யாத புது முயற்சியை கையில் எடுத்த சிம்பு.. STR 48 படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்