OTT வேண்டாம், தியேட்டரில் வெளிவரும் சிவகார்த்திகேயனின் டாக்டர்.. மாஸாக வெளிவந்த ரிலீஸ் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். காமெடியனாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர் ஆரம்பகாலங்களில் மெரினா, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா என காமெடியா பாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வந்தார்.

அதன்பின் இவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மிகப்பெரிய வெற்றியடைந்து இவரது கேரியரை மாற்றியது. இதன்பின் காக்கி சட்டை படத்தில் கமர்சியல் ஹீரோவாக நடித்தார். இப்படத்திற்கு ஓரளவிற்கு ரீச் கிடைத்தது. இதன்பின் முழுநேர கமர்சியல் ஹீரோவாக இல்லாவிட்டாலும் காமெடி கலந்த ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடைசியாக இவருக்கு மிகப்பெரிய வெற்றி என்றால் அது ரஜினி முருகன் மற்றும் ரெமோ படங்கள்தான். அதன்பின் எந்தப்படமும் பெரிதாக வெற்றிபெற வில்லை. கிராமத்து பின்னணியில் வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மிஸ்டர் லோக்கல், சீமராஜா இரண்டுபடங்களும் ஏன்தான் நடித்தார் என்று இவருக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு மொக்கை படங்களாக அமைந்தது. தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் டான் தவிர மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

இதில் டாக்டர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பிரியங்கா அருள் மோகன் இதில் நாயகியாக நடித்துள்ளார். இது இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டான் படத்திலும் சிவகார்திகேயனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

siva-doctor
siva-doctor

டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயனின் நண்பரான அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்துள்ளனர். அத்துடன் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் அந்த போஸ்டர் வைரலாகி வருகின்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்