விஜய்யை பின்பற்றச் சொல்லி வற்புறுத்திய செல்வமணி.. அஜித்துக்கு வைத்த பெரிய கோரிக்கை

சினிமா திரையுலகை பொறுத்தவரை அதை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்காகவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உட்பட ஏராளமான சங்கங்கள் இருக்கிறது. அந்த வரிசையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு என பெப்சி என்ற ஒரு அமைப்பும் செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்பின் தலைவராக இயக்குனர் ஆர் கே செல்வமணி இருக்கிறார். இவர் தற்போது ஒரு பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் வரும் மே 8ஆம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது என்றும், அன்றைய தினத்தில் சென்னையில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படிச் செய்வதில் தவறு இல்லை. ஆனால் சென்னையில் இருக்கும் இடங்களை ஹைதராபாத்தில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்துவது எந்த விதத்தில் நியாயம்.

அதனால் சென்னையிலேயே படப்பிடிப்பைத் நடத்துமாறு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் வெளிப்படையாகவே வேண்டுகோளை வைக்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும் நடிகர் அஜித் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதைத் தவிர்த்து விட்டு சென்னையிலேயே நடத்த வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழும்.

இதேபோன்ற கோரிக்கையை நாங்கள் விஜய் மற்றும் ரஜினியிடம் கூறினோம். அவர்களும் எங்களுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் அஜித் தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடிகர் அஜித் நடித்துவரும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அதிலும் சென்னை மவுண்ட் ரோட் போன்ற செட் ஹைதராபாத்தில் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதைத்தான் இயக்குனர் செல்வமணி மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இதேபோன்று விஜய்யின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடந்து வருகிறது.

ஆனால் அதற்கு முன்பே விஜய், தயாரிப்பாளரிடம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் தெலுங்கு தயாரிப்பாளரான அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதையே விரும்புவதால் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் பெப்சி தலைவர் செல்வமணியின் இந்தக் கோரிக்கையை அஜித் நிச்சயம் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்