அந்த கேடுகேட்ட பழக்கத்தால் குடும்பத்தை இழந்த பாலா.. ஆட்டம் காணப்போகும் சினிமா ஆசை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா தன் படங்களில் அழுத்தமான கதைகளை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர். இதனிடையே பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆன இயக்குநர் பாலாவிற்கு ஒரு கெட்ட பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம்.

நடிகர் விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான சேது படத்தை இயக்கி, அதன் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகமானார் பாலா. அதன்பின்னர் நந்தா,பரதேசி, பிதாமகன் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை கொடுத்து பல விருதுகளை பெற்றார். கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளையும் 15-க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் பாலாவிற்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்கள் சிறுவயதிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதை அறிந்த பாலாவின் பெற்றோர்கள் அவரை கண்டித்ததுடன், கடுப்பான பாலா, வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். மேலும் அங்கிருந்தே திரைப்படங்களில் இயக்குவதை ஆரம்பித்தார்.

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்கும்போதே இயக்குனர் பாலா கஞ்சா பழக்கத்தில் மூழ்கியவர் என்பது கோலிவுட் வட்டாரத்தில் தெரிந்த ஒன்றே. இதனிடையே சமீபத்தில் இவரது முன்னாள் மனைவி முத்துமலர் விவாகரத்து பெற்றதற்கு முக்கியமான காரணமாக பாலாவின் கஞ்சா பழக்கம் தான் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பாலாவின் கஞ்சா பழக்கத்தால் பெற்றோர்கள் முதல் உறவினர்கள் வரை யாரும் பாலாவிடம் பேச்சு வார்த்தை இல்லாமல் உள்ளனர். புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட பல கெட்ட பழக்கங்களை விட்டுவிட்ட பாலாவால் கஞ்சா பழக்கத்தை மட்டும் விடாமல் இருப்பதால் அவரது வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாலா மீனவர்கள் பிரச்சினையை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஆனால் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாலாவின் சினிமா வாழ்க்கையும் தற்போது அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்