Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே காட்சியை அரைநாள் ரீடேக் வாங்கிய தனுஷ்.. பொறுமையை இழந்து இயக்குனர் விட்ட அறை

மறுபடி மறுபடியும் ரீடேக் வாங்கியதால் படப்பிடிப்பு தளத்தில் தனுஷை அறைந்த இயக்குனர்.

கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் சினிமாவில் நுழையும்போது ஏகப்பட்ட கேலி கிண்டலுக்கு ஆளானார். ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என முகத்திற்கு நேராகவே தனுஷை அசிங்கப்படுத்தி உள்ளனர் .

ஆனால் அதை எல்லாம் கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே மெருகேற்றிக் கொண்டு தற்போது உச்ச நாயகனாக திரையுலகில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய 2-வது படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனரிடம் அறை வாங்கி அழுது கொண்டே ஓட்டம்  பிடித்திருக்கிறார். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை வெற்றிக்குப் பிறகு, செல்வராகவன் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். இதில் தனுசை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.

Also Read: செல்வராகன் நடிக்க கூப்பிட்டு வர மறுத்த பிரபுதேவா.. மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்பவும் புலம்பும் சூப்பர் ஹிட் படம்.!

வேறு வழியின்றி அண்ணன் சொல்வதைக் கேட்டு நடித்து வந்தார். இதில் ஒரு காட்சியில் சோனியா அகர்வால் தனுசை தன் வீட்டிற்கு அழைத்து செல்வார். அப்போது தனுஷ் அந்த வீட்டை பார்த்து ஆச்சரியப்படுகிற மாதிரி நடிக்க வேண்டும். ஆனால் அவர் சரியாக நடிக்கவில்லை. அரை நாள் முழுவதும் வீணடித்தார்.

இதனால் கோபமடைந்த செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் தனுசை ஓங்கி அறைந்தார். இதனால் முகத்தில் ஒட்டி வைத்த தாடி பறந்தது. அழுது கொண்டே தனுஷ் வீட்டிற்கு ஓடினார். தன் அப்பாவிடம், ‘ஒழுங்காக படித்துக் கொண்டிருந்த என்னை படத்தில் நடிக்க வைத்தீர்கள். இப்ப கூட்டத்தில் அடிக்கிறான் அண்ணன் என்று புலம்பி பேசியுள்ளார். இனிமேல் நீங்கள் கூப்பிட்டால் நடிக்க மாட்டேன்.  நான் படிக்கப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Also Read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா எனிமியிடம் காட்டும் நெருக்கம்

அதன் பின் செல்வராகவன் மற்றும் அவரது அப்பா இருவரும் தனுஷிடம் பேசி சமாதானப்படுத்தி மீண்டும் தனுஷை நடிக்க வைத்தனர். செல்வராகவனுக்கு தெரிந்திருக்கிறது தனுஷ் எவ்வளவு பெரிய திறமைசாலி என்று. அவரால் நிச்சயம் சினிமாவில் சாதிக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்பினார்.

அவருடைய நம்பிக்கையும் வீண் போகவில்லை. செல்வராகவன் தன்னுடைய தம்பியை படப்பிடிப்பு தளத்தில் அடித்து நல்வழிப்படுத்தியதால் தான் இன்று தனுஷ் தவிர்க்க முடியாத இந்தியாவின் முக்கிய ஸ்டாராக உயர்ந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Also Read: ஹிந்தி, தெலுங்கு மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

Continue Reading
To Top