ஜெயம் ரவி நடித்ததால் தான் படம் பிளாப்.. தனுஷ் நடித்திருந்தால் படம் ஹிட் ஆயிருக்கும்

ஜெயம் ரவிக்கு ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்களே தவிர இவரை வெறுப்பவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய பேச்சாலும், நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதிலும் இவர் தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக செய்து முடித்து வெற்றியை பார்க்கக் கூடிய திறமை இவரிடம் இருக்கிறது.

அப்படிப்பட்ட இவர் நடித்த ஒரு படம் ஃபெயிலியர் ஆனதால் இப்படத்தில் ஜெயம் ரவி நடித்ததால் தான் மொத்த சொதப்பலுக்கும் காரணம் என்று எல்லா பழியையும் இவர் மேலே தூக்கிப்போட்டு விட்டார் அப்படத்தின் இயக்குனர். அதாவது ஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு சகலகலா வல்லவன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சூரஜ். இதில் ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி, விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Also read: ஜெயம் ரவியின் மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய 5 படங்கள்.. வந்த சுவடு தெரியாமல் போன அகிலன்

இப்படத்தில் த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி ஒருவரை ஒருவர் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு எலியும் பூனையும் ஆக சண்டை போட்டுக் கொண்டு ஒரு விதமான திருப்தியை அளிக்கவில்லை. அதனால் கலவையான விமர்சனத்தை பெற்று மிகவும் தோல்வியடைந்தது. இதைப் பற்றி தற்போது இயக்குனர் அளித்த பேட்டியில் நான் இயக்கிய சகலகலா வல்லவன் படம் வெற்றி பெறாததற்கு ஜெயம் ரவி தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

அந்தப் படத்தில் நான் செய்த பெரிய தவறு அந்த கேரக்டருக்கு ஜெயம் ரவியை தேர்ந்தெடுத்தான். ஆனால் முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு தனுஷ் தான் தேர்வு செய்யப்பட்டார். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாது என்று விலகி விட்டார். அதன்பின் வேற யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த போது திடீரென்று அவசரத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

Also read: தொடர் பிளாப்பால் 3 ஹீரோக்கள் ஒதுக்கிய கதை.. வான்டட்டாக தலையை கொடுத்த ஜெயம் ரவி

அத்துடன் அந்த கதாபாத்திரம் ஜெயம் ரவிக்கு கொஞ்சம் கூட பொருந்தவே இல்லை. அதனால் தான் அந்த படம் பிளாப் ஆனது என்று சொல்லி இருக்கிறார். மேலும் இதில் தனுஷ் மட்டும் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இப்படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும். நான் செய்த தவறால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன் எனக்கு அது இப்ப வரை மன வேதனையை கொடுத்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.

எப்படி யோசிச்சாலும் இந்த கதைக்கு தனுஷ் நடித்திருந்தால் மட்டும் என்ன படம் ஹிட் ஆகியிருக்குமா. இதுவே ஒரு வேளை இப்படம் வெற்றி பெற்றிருந்தால் அதற்கு மொத்த காரணமும் என்னுடைய கதை தான் என்று பெருமை சேர்த்திருப்பார் இயக்குனர் சூரஜ். அப்படி பார்த்தால் அதற்கு அடுத்து இவர் இயக்கி வெளிவந்த கத்தி சண்டை மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் அவ்வளவு சூப்பர் ஹிட் ஆயிடுச்சா என்ன. அந்த படமும் பிளாப் தான் ஆனது. இவர் கதை மேல் குறைய வைத்துக் கொண்டு நடித்த ஹீரோக்களை குறை சொல்லிக் கொண்டு வருகிறார்.

Also read: சமீபத்தில் ஹிட் கொடுக்க திணறி வரும் 5 ஹீரோக்கள்.. கும்பலோடு கோவிந்தா போடும் ஜெயம் ரவி

- Advertisement -spot_img

Trending News