புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வீட்டு பிரச்சனையை மூட்டை கட்டி வைத்த தனுஷ்.. பிரபல நடிகரின் ஆதரவுடன் அடுத்த அமர்க்களம்

வீட்டு பிரச்சனையெல்லாம் முடியுதோ இல்லையோ அதனை அப்படியே மறந்து விட்டார் தனுஷ். தற்பொழுது புது தெம்புடன் களமிறங்க போகிறார். லதா ரஜினிகாந்த அவருக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார் என்றுலாம் செய்திகள் பரவியது. அத்தனை மனதில் வைத்து செம கடுப்பில் இருக்கிறாராம் தனுஷ்.

இந்த காலகட்டத்தில் நடிப்பில் பின்னி பிடலேடுத்து கமலை தாண்டும் இடத்தில் இருந்தும் இப்படி ஒரு நிலைமையா என வேதனை பட்டாராம் தனுஷ். அதெக்கெல்லாம் பதிலடி கொடுக்கத்தான் ஒரு  பெரிய கையுடன் பட்டைய கிளப்ப போகிறார்.

தனுஷ் ரொம்ப வருடங்களுக்கு முன்பு ஒரு வரலாற்று கதையை எழுதி வைத்துள்ள படம் நான் ருத்ரன். இது தனுஷின் கனவு ப்ராஜெக்ட் என அனைத்து பேட்டியில் கூறி வந்தார். ஆனால் அதற்கான செலவு நேரம் எல்லாம் அதிகம் ஆகும் என்பதால் அப்படியே போட்டுவிட்டார். அதனை தூசி தட்டி தற்பொழுது பாகுபலிக்கு இணையாக எடுக்க போகிறாராம்.

அதில் தெலுங்கு நடிகரான அக்கினி நாகர்ஜுனா, சைக்கோ படத்தில் கலக்கிய நடிகை அதிதி ராவ் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நான் ருத்ரன் படத்தின் இசை அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

ஏற்கனவே ஷான் ரோல்டன் நான் ருத்ரன் கதை கேட்டு மிரண்டே போயிட்டாராம். அவ்வளவு அற்புதமான கதை என ஒரு பேட்டியில் கூறினார். தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்பொழுது நான் ருத்ரன் பட வேலையை துவங்கி விட்டார்.

ஷூட்டிங் தொடங்க லேட் ஆனாலும் அதற்கு முன்னாடி கதை, திரைக்கதையை பட்டை தீட்டி வருகிறார். பட்ஜெட் அதிகமாக இருப்பதால் ஒரு சில கார்பரேட் நிறுவனம் முதலீடு செய்ய வருகிறார்கள். தனுஷும் அவர் பங்குக்கு கொஞ்சம் பணம் போட போகிறார். மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வர வாழ்த்துக்கள்.

- Advertisement -

Trending News