செல்வராகவனால் வந்த சோதனை.. கோர்ட், கேஸ்னு அலைய போகும் தனுஷ்

நடிகர் தனுஷ் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் கெளவ் பாய் கெட்டப்பில் இருக்கும் தனுஷ் வாயில் சுருட்டுடன் போஸ் கொடுத்திருப்பார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரே தனுஷுக்கு பிரச்சனையாக அமையும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒரு முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் புகைப்படிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டடிருப்பதற்கு எதிராக நீதிமன்றம் நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள பிரச்சனையா என தனுஷ் புலம்பி வருகிறாராம். இப்போதான் விஐபி பிரச்சனைய தனுஷ் முடிச்சாரு அதுக்குள்ள அடுத்த படத்துக்கும் பிரச்சனை ஆரம்பமாகி விட்டது போல. ஆமாங்க வேலையில்லா பட்டதாரி படத்தில நடிகர் தனுஷ் சும்மா கெத்தா வாயில சிகரெட் போட்டு பிடிப்பாரு.

அந்த சீன் படத்துல பார்க்க நல்லா தான் இருந்துச்சு. ஆனா சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்துதல், தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைத்தல் என கூறி தனுஷ் மீது வழக்கு பதிவு செஞ்சிட்டாங்க. அதுமட்டும் இல்லாம சிகரெட் பிடிக்கும் போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகமும் இடம்பெறவில்லையாம்.

இதனால் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரா நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் உத்தரவிடக் கோரி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில வழக்கு தொடரப்பட்டது. இப்போதான் தனுஷ் அந்த வழக்க முடிச்சிட்டு வந்தாரு அதுக்குள்ள நானே வருவேன் படத்துக்காக இன்னொரு வழக்கா என மனுஷன் நொந்து விட்டாராம்.

naane-varuven-cinemapettai
naane-varuven-cinemapettai

தனுஷுக்கு மட்டுமல்ல சார்கார் படத்திற்காக நடிகர் விஜய்யும் இதேபோன்ற வழக்கை சந்தித்துத குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் இடம்பெற்றதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர்கள் இதுபோன்று புகையிலை பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தலாமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்