அந்த மாதிரி எனக்கு படம் வேண்டும்.. நயன்தாராவிற்கே சவால் விடும் சர்ச்சை நடிகை

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் விடுதலை இப்படத்தில் சூரி கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் அதிகாரிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. அதாவது உயர் அதிகாரிகள் தனது கீழே பணி செய்யும் அதிகாரிகளை எவ்வளவு மட்டமாக நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கிறார்கள் என்பது இப்படத்தின் கதை என படக்குழுவினர் கூறிவருகின்றனர்.

இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் படத்தை இயக்கவுள்ளார். தொடர்ந்து பிசியாக வேலை செய்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் தற்போது முதல்முறையாக தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளார். இதுவரைக்கும் பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் முதல் முறையாக தயாரிப்பில் களமிறங்கி உள்ளதால் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

ஆண்ட்ரியா நடிப்பில் கோபி நாயனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஜெய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் இந்த படக்குழு நயன்தாராவை வைத்து அறம் படத்தை எடுத்து வெற்றி கண்டுள்ளனர். அந்த படத்தை போல எனக்கு ஒரு படம் வேண்டும் என ரொம்ப நாட்களாகவே ஆண்ட்ரியா அவர்களிடம் கேட்டதாக தெரிகிறது.

அதேபோல் ஆண்ட்ரியாவிற்கும் மாஸ்டர் படத்தில் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் வெற்றிமாறன் தயாரிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இயக்குனராக வெற்றி கண்ட வெற்றிமாறன் தயாரிப்பாளராக வெற்றி பெறுவாரா என்பது இப்படத்தின் வெற்றியை வைத்து தான் தீர்மானிக்க முடியும் ஆனால் வெற்றிமாறன் பொருத்தவரை எப்போதும் கதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் இவரே இப்படத்தை தயாரித்துள்ளதால் கண்டிப்பாக இப்படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

மேலும் வெற்றிமாறன் தற்போது கைவசம் ஆக ஏராளமான படங்கள் கையில் வைத்துள்ளார். கூடியவர்களே படங்களை முடித்துவிட்டு அடுத்தடுத்து மற்ற நடிகர்களுடன் பணியாற்றுவார் எனசினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்