Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் பிறந்தநாளுக்கு காமன் டிபி வெளியிட்ட தயாரிப்பாளர்.. தெறிக்க விடப் போகும் தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் எப்போது.?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி-65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் முடிந்துவிட்டது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊரடங்கும் முடிந்தபின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் அதிக தமிழ் ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் என்ற பெயர் தளபதி விஜய்க்கு உண்டு. அந்த வகையில் வரும் ஜூன் 22ஆம் தேதி இவரது பிறந்த நாளுக்காக காமன் டிபி ஒன்றே மாஸ்டர் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

vijay-bday-special
இதனை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இவரது பிறந்த நாளன்று தளபதி 65 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்பதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.
தளபதி விஜய் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவருமா என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். எது எப்படியோ பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

vijay-bday-special
சமூக வலைத்தளங்களில் அவர்கள் உருவாக்கிய புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.
