இதுவரைக்கும் நாம் சினிமாவில் பார்த்ததெல்லாம் பொய்யா.. அட இத்தனை நாள் நம்மளை ஏமாத்திட்டாங்களே

தமிழ் சினிமாவில் பல காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நம்ப முடியாது. அந்த மாதிரியான காட்சிகளை தற்போது பார்ப்போம்.

குளோரோஃபார்ம் . பொதுவாக சினிமாவில் கடத்துவது என்றால் குளோரோபார்ம் பயன்படுத்தி தான் நடிகர் மற்றும் நடிகைகளை கடத்துவார்கள். அதுவும் குளோரோபார்ம் வைத்த உடனே மயங்கி விடுவார்கள். ஆனால் உண்மையில் குளோரோஃபார்ம் பயன்படுத்தினால் 5 முதல் 10 நிமிடங்களுக்கு பிறகுதான் மயக்கம் வரும் என்பது தான் உண்மை.

கைத்துப்பாக்கிகள் சுடுவது. பல மாஸ் நடிகர்கள் ஒரே நேரத்தில் இரண்டு கைகளில் துப்பாக்கியை பயன்படுத்தி சுடுவார்கள். ஆனால் உண்மையில் ஒரே நேரத்தில் ஒரு துப்பாக்கியை பயன்படுத்தி மட்டும்தான் சுட முடியும்.

கையெறி குண்டுகளை பல்லால் கிடைப்பது. தமிழ் சினிமாவில் பல படங்களை நடிகர்கள் வாயில் கடித்து குண்டுகளை உடனே தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அவ்வளவு எளிதாக குண்டுகளைக் கடித்து எறிந்து விட முடியாது அதற்கென சிறப்பாக பயிற்சி பெற்று பிறகுதான் குண்டுகளை எறிய முடியும்.

rajini-ramgopal-varma
rajini-ramgopal-varma

கண்ணிவெடி. படங்களில் கண்ணிவெடியை காலால் மிதித்து விட்டால் உடனே வெடித்துவிடும். ஆனால் படங்களில் நடிகருக்கு நெருக்கமானவர் யாராவது கண்ணிவெடியை மிதித்து விட்டால் எப்படியாவது ஹீரோ காப்பாற்றி விடுவார். ஆனால் அப்படி எல்லாம் கண்ணிவெடியிலிருந்து காப்பாற்ற முடியாது.

பிரக்னன்ட் சீன். தாய் அல்லது குழந்தையை ஏதாவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என சினிமாவில் கூறுவார்கள். ஆனால் உண்மையில் தாயை மட்டும் தான் காப்பாற்ற முடியுமாம்.

கத்தி எடுப்பது. காலம் காலமாக படத்தில் யாராவது ஒருவர் கத்தியால் குத்தி விட்டால் அவரது கைரேகை எடுப்பதற்காக கர்ச்சீப்பை பயன்படுத்தி எடுப்பார்கள். ஆனால் உண்மையில் கர்சீப் கொண்டு எடுத்தாலும் கைரேகை அழிந்துவிடும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்