நானும் ஆல்ரவுண்டர் தான், மதிக்காத கேப்டன்.. பேட்டால் பதிலடி கொடுத்த கிரிஸ் மோரிஸ்

நேற்று டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த 2021 ஐபிஎல் ஏழாவது போட்டி பல திருப்பங்களுடன், சுவாரசியமாக நடந்து முடிந்தது.

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்யுமாறு வலியுறுத்தியது . ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி அணி.

அதிரடியாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காத டெல்லிஅணி 8 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியை போலவே ராஜஸ்தான் அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.வெறும் 36 ரன்களுக்கு 4 முக்கியமான வீரர்களை இழந்தது. ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், சிவம் துபே, போன்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

டேவிட் மில்லர் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி 62 ரன்கள் எடுத்தார். மில்லரும் 16வது ஓவரில் அவுட்டான பின் ராஜஸ்தான் அணியின் கதை முடிந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது. களத்தில் கிறிஸ் மோரிஸ், உனட்கட் மட்டுமே இருந்தனர்.

கடைசி இரண்டு ஓவரில் 27 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில் 19வது ஓவரை ரபாடா வீசினார். இதில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு கிறிஸ் மோரிஸ் நான் இருக்கிறேன் கவலை வேண்டாம் என்பதுபோல் ஆட்டத்தை மாற்றினார்.

கடைசி ஓவரில் இரண்டு மற்றும் நான்காவது பந்தில் 2 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் கிறிஸ் மோரிஸ். 18 பந்துகளைச் சந்தித்த மோரிஸ் 36 ரன்களை குவித்தார்.

கடந்த போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் அடிக்க வேண்டிய நிலைமையில் சஞ்சு சாம்சன், மோரிஸுக்கு ஸ்டிரைக் கொடுக்கவில்லை. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

Chris-Cinemapettai.jpg
Chris-Cinemapettai.jpg

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு கிறிஸ் மோரிஸ் பதிலடி கொடுத்துள்ளார். நானும் சிக்ஸ் அடிப்பேன், என்னாலும் மேட்சை முடிக்க முடியும் என்று நேற்று அதிரடி சிக்ஸ்களை பறக்கவிட்டு மேட்சை முடித்து, தன்னை நிரூபித்துள்ளார்.

Morris-Cinemapettai.jpg
Morris-Cinemapettai.jpg
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்