சென்னையில் 16 நாளில் 7500 லிருந்து 2700 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு.. ஊரடங்கால் ஸ்டாலினுக்கு வெற்றியா?

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் ஓரளவு தளர்வான ஊரடங்கு அரசாங்கம் அறிவித்தது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமானதால் தற்போது முழு ஊரடங்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர். பிரபலங்கள் உதவி செய்வதைத் தாண்டி மக்களும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் நபர்களுக்கு தொடர்ந்து தங்களது ஆதரவையும் உதவியும் செய்து அனைவரையும் பாதுகாத்து வருகின்றனர்.

முதலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தற்போது மக்களுக்காக சேவையாற்றும் பத்திரிக்கையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதற்கட்டமாக போடப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் எத்தனை பேர் பதித்துள்ளார்கள். தற்போது ஊரடங்கு பிறப்பித்தது மூலம் பாதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

chennai-covid-cases
chennai-covid-cases

இந்த அறிவிப்பினை பார்க்கும்போது ஊரடங்கு பிறப்பித்தது நல்லதுதான் என மக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இன்னும் ஓரிரு நாட்களில் குறைந்து விடும் அதன் பிறகு பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News