புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மருமகள்களுக்காக ஆஜராகும் சாருபாலா.. குணசேகரன் கண்ணில் தெரியும் மரண பயம்

Ethirneechal Serial: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் சமீப காலமாக ரூட் மாறி போனாலும் இன்றைய ப்ரோமோ செமையா இருக்கு என சொல்ல வைத்திருக்கிறது. அதன்படி குணசேகரனின் சூழ்ச்சியால் விசாரணை கைதிகளாக இருக்கும் மருமகள்கள் இன்று கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்களை கண்ணில் ஒரு திமிருடன் பார்க்கும் குணசேகரனிடம் கதிர் இப்ப சந்தோஷமா? பார்த்தல்ல, நடக்க கூட முடியாதபடி பண்ணி இருக்காங்க என கொதித்து போய் பேசுகிறார். ஆனாலும் இதுக்கெல்லாம் அசருவனா நான் என்ற ரீதியில் குணசேகரன் அதே திமிருடன் நிற்கிறார்.

ஆனால் அவருக்கு ஆட்டம் காட்டும் வகையில் சாருபாலா குணசேகரன் வீட்டு பெண்களுக்காக வக்கீல் உடையில் கோர்ட்டில் ஆஜராகும் காட்சி வேற லெவலில் இருக்கிறது. இதை எதிர்பார்க்காத குணசேகரன் கண்ணில் மரண பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also read: பெத்த அப்பாவால் தர்ஷினி படும் பாடு.. குணசேகரன் முகத்திரையை கிழிக்க ப்ளான் போடும் ஜீவானந்தம்

அதேபோல் மருமகள்களும் இதை நம்ப முடியாத ஆச்சரியத்தில் பார்க்கின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள ப்ரோமோ இன்றைய எபிசோடுக்கான ஆர்வத்தை கூட்டி இருக்கிறது. அதிலும் ஒரு காலத்தில் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்ட கதிர் இப்போது ஹீரோவாக மாறி இருப்பது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் இனிமேல் தான் ஆட்டம் சூடுபிடிக்க போகுது என்ற ரீதியில் அடுத்தடுத்த எபிசோடுகள் வர இருக்கிறது. அதில் தர்ஷினிக்கு என்ன ஆச்சு? அப்பத்தாக்கு என்ன ஆச்சு? அதற்கு காரணம் யார்? குணசேகரனின் தில்லுமுல்லு என பல கேள்விகள் இருக்கிறது. இந்த முடிச்சுகள் எல்லாம் இனிவரும் எபிசோடுகளில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: நீங்கதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அத்தை.. கோமதியின் முகத்திரையை கிழிக்கும் மருமகள்

- Advertisement -

Trending News