வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பெத்த அப்பாவால் தர்ஷினி படும் பாடு.. குணசேகரன் முகத்திரையை கிழிக்க ப்ளான் போடும் ஜீவானந்தம்

Ethirneecha Serial: எதிர்நீச்சல் சீரியலில் கடந்த சில வாரமாகவே தர்ஷனியை கண்டுபிடிக்கும் காட்சிகள் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மகளை காணவில்லை என குணசேகரன் போலீசில் புகார் கொடுத்ததால் வீட்டு மருமகள்கள் அனைவரும் விசாரணை கைதிகளாக காவல் நிலையத்தில் இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து நடக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஜீவானந்தம் ஈஸ்வரியை சந்தித்து நான் சொல்வதைப் போல் சொல்லுங்கள் என சில விஷயங்களை கூறுகிறார்.

அதேபோல் ஓவர் ஆட்டம் ஆடும் குணசேகரனை எதிர்த்து சக்தி, கதிர் இருவரும் பேசுகின்றனர். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் அசரமாட்டேன் என்பது போல் இருக்கும் குணசேகரன் இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ என்ற எண்ணம் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வரத்தான் செய்கிறது.

Also read: விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

அதன்படி தர்ஷினி காணாமல் போனதற்கு முக்கிய காரணம் குணசேகரன் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பெத்த மகளையே கடத்தி வைத்து ஆட்டம் போடும் குணசேகரன் அவரை கொல்வதற்கு கூட தயங்க மாட்டார்.

அந்த அளவுக்கு வறட்டு பிடிவாதக்காரராக இருக்கும் இவரால் சீரியலின் போக்கே மாறி வருகிறது. ஆனாலும் வில்லனிலிருந்து ஹீரோவாக மாறிய கதிரின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. இப்படி குணசேகரனுக்கு எதிராக அனைவரும் திரும்பும் நிலையில் தர்ஷினி வந்து கோர்ட்டில் சொல்ல போகும் பல உண்மைகள் நிச்சயம் யாரும் எதிர்பாராததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: சிவக்குமாரின் முதல் ஜோடியே சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தான்.. 40 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி

- Advertisement -

Trending News