Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷாலின் ‘சக்ரா’ திரைவிமர்சனம்.. படம் எப்படி ஒரு வாட்டியாது பாக்கலாமா.?

பல தடைகளைத் தாண்டி, நேற்று விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது  திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து, அறிமுக இயக்குனர் எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக யுவன் இசையமைத்துள்ளார்.

அதேபோல் பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் கதைக்களம் என்னவென்றால் சுதந்திர தினத்தன்று சென்னையில் அடுத்தடுத்த 50 வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதில் விஷால் வீடும் ஒன்று. ராணுவத்தில் பணியாற்றிய விஷாலுக்கு இந்த சம்பவம் தெரியவர கொள்ளையர்களை பிடிப்பதற்காக அங்கிருந்து சென்னைக்கு வருகிறார். ஏனென்றால் தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதால், கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக விஷால் கையாளும் உத்திகள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.

மேலும் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக தனது நேர்த்தியான நடிப்பினை வெளிக்காட்டி விஷாலுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

Chakra

Chakra

அதைப்போன்று நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மெர்சல் ஆக்கியுள்ளார். மேலும் சிருஷ்டி டாங்கே. கேஆர் விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோரும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர்.

எனவே  விஷாலின் சக்ரா திரைப்படமானது அதிரடி ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. மொத்தத்தில் சக்ரா அதிரடியான திரை விருந்து தான்.

இருப்பினும் இந்த படத்தின் இரண்டாவது பகுதி இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ண ஓட்டமாக அமைந்தது. அதேபோல் சக்ரா திரைப்படம் இரும்புத்திரை மாதிரியே உள்ளதால் கொஞ்சம் யூகிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்து விட்டது.

ரேட்டிங்- 2/5

Continue Reading
To Top