வலிமை படத்தில் யுவன் பாதியில் விலகியதற்கு இதுதான் காரணம்! இப்படி பண்ணிட்டீங்களே சார்

boney kapoor yuvan shankar raja
boney kapoor yuvan shankar raja

பின்னணி இசையின் மன்னன் என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. நடிகர் அஜித்தின் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். அஜித்தின் ஆரம்பம், மங்காத்தா, நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றிப் படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். வலிமை படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் 3 பாடல்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. மற்ற பாடல்கள் வெளியானால் படத்தின் கதை தெரிந்துவிடும் என்று இயக்குனர் கேட்டுக்கொண்டதால் மற்ற பாடல்கள் வெளியாகாமல் உள்ளது.

வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து விக்னேஷ் சிவன் எழுதிய நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா பாடல் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

யுவன் சங்கர் ராஜா அஜித்க்கு எப்போதும் சிறந்த தீம் மியூசிக் கொடுப்பார். ஆனால் வலிமை படத்தில் பின்னணி இசை ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனால் யுவன் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அடைந்து உள்ளார்கள். வலிமை படத்தில் யுவன் ஏன் பின்னணி இசை அமைக்கவில்லை என்ற காரணம் தெரியாமல் இருந்தது.

வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா போட்ட பிஜிஎம் இயக்குனர் வினோத்துக்கு பிடிக்கவில்லை. அதைப்பற்றி வினோத் யுவனிடம் சொன்னதற்கு யுவன் சரியான பதில் கொடுக்கவில்லை. இதனால் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஐ வைத்து பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளது.

வலிமை படத்தின் இயக்குனர் எச் வினோத்துடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் ஜிப்ரான் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். யுவன் போட்ட பின்னணி இசை வலிமை படத்தில் இடம் பெறாததால் தயாரிப்பாளர் போனி கபூருக்கும், யுவனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் ஜிப்ரானின் பின்னணி இசையும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement Amazon Prime Banner