தமிழில் இரண்டு, மூன்று படங்களில் நடித்துவிட்டு பின் தெலுங்கு சினிமா பக்கம் போன நடிகை ராகுல் பிரீத் சிங். தமிழில் அவருக்கு சரியான மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார்.

மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகும் SPYDER படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பு தனக்கு பிடிக்கும் என்றும் அவருடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்றும் கூறியுள்ளார். அதோடு அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தனது பெரிய ஆசை என்றும் கூறியுள்ளார்.

ராகுல் பிரீத் ஏற்கெனவே ஹிந்தியில் யாரியன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.