சன் டிவி சீரியலில் நடித்துள்ள பிந்து மாதவி.. அட, இது சூப்பர் ஹிட் சீரியல் ஆச்சே!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்தவர் பின்னர் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது கவனிக்கப்படும் நாயகியாக வலம் வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நாயகி என பெயர் எடுத்த பிந்துமாதவி சேரன் இயக்கிய பொக்கிஷம் என்ற படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பிசியாக இருந்த பின்பு மீண்டும் கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவிலேயே செட்டிலாகிவிட்டார்.

bindhu-madhavi-cinemapettai-01
bindhu-madhavi-cinemapettai-01

பிந்து மாதவி நடிப்பில் வெளிவந்த தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் தொடர் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகு நடித்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

தற்போது மீண்டும் கோலிவுட்டில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் அவரின் பழைய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. சன் டிவியில் 2007 முதல் 2011 வரை கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒளிபரப்பான மகள் சீரியலில் நடித்துள்ளார்.

magal-serial-cinemapettai
magal-serial-cinemapettai

இது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வந்தது. தற்போது சினிமாவில் வாய்ப்புகளை இழந்த நிலையில் மீண்டும் பிந்து மாதவி சீரியலுக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்