பிக் பாஸ் சீசன் 5.. தேதி குறித்த விஜய் டிவி, தெறித்து ஓடும் கமல்

ரியாலிட்டி ஷோக்கள் என்றால் விஜய் டிவிதான் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தியில் இருந்து கொண்டுவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே அமோக வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளது விஜய் டிவி. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆட்களை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கும் விஜய் டிவி ஒளிபரப்பு தேதியையும் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டாராம்.

முதல் மூன்று சீசன்கள் திட்டமிட்டபடி நன்றாக நடந்த நிலையில் கடந்த சீசன் மட்டும் கொரானா பாதிப்பில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரியில் முடிவடைந்தது.

அதுமட்டுமில்லாமல் முதலில் பேசி வைத்த போட்டியாளர்கள் பலரும் கடைசி நேரத்தில் கை விரிக்க வேறு வழியே இல்லாமல் விஜய் டிவி பிரபலங்களை பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிக்குள் கொண்டுவந்து நிகழ்ச்சியை கெடுத்துவிட்டது விஜய் டிவி.

ஆனால் இந்த முறை தெளிவாக உள்ளதாம். அனைத்து பரிசோதனைகளையும் முறையாக முடித்து போட்டியாளர்களை ஒரு மாதங்களுக்கு முன்பே கூட்டிவந்து அனைத்தையும் பக்காவாக ரெடி செய்ய உள்ளதாம்.

மேலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இந்த வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் பொங்கலுக்கு முடிவடையும் என தெரிகிறது. ஆனால் கமல்ஹாசன் தற்போது தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் அவரது தேதிகள் ஒத்துவருமா, கடைசி நேரத்தில் கமல் கைவிரிப்பாரா என பலயோசனைகள் இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 5 வருவது உறுதி என்று கூறிவிட்டார்கள் விஜய் டிவி வட்டாரங்கள்.

biggboss-season-5-cinemapettai
biggboss-season-5-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்