Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 5 – விஜய் டிவி போட்ட புது ரூல்ஸ்.. இப்பவே கண்ண கட்டுதே!

kamal-vijay-tv-big-boss

உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் விரைவில் 5வது சீசனை தொடங்க உள்ளது. இதற்கு கமலஹாசன் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சில நிபந்தனைகளை வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தில் எப்படி போட்டியை நடத்துவது என்பது போன்ற சந்தேகங்கள்  கிளப்பியுள்ள நிலையில், போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் விஜய் டிவி இறங்கி உள்ளதாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டு இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி புகழ் அல்லது பவித்ரா 5 வது சீசனில் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும். இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு படவாய்ப்புகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்களது உண்மையான முகத்தை வெளிப்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இதைக்கேட்டு ரசிகர்கள் இப்பவே கண்ண கட்டுதே என்பது போன்ற புலம்பி வருகின்றனர்.

pugazh-vijaytv

pugazh-vijaytv

Continue Reading
To Top