அதிக பட்ஜெட்டில் உருவான 5 தமிழ் படங்கள்.. தயாரிப்பாளர்களை வெச்சு செஞ்ச ஷங்கர், மணிரத்னம்

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் என்றால் அது ஷங்கர் தான். தனக்கு தேவையான பட காட்சிகளுக்காக எவ்வளவு செலவு செய்யவும் தயங்க மாட்டார், எந்த நாடுகளுக்கு செல்லவும் தயங்க மாட்டார். இவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள், போட்ட பணத்தை எடுக்கின்றனவா என்றால் கேள்விக்குறியே. கோலிவுட்டின் ஹை பட்ஜெட் 5 படங்களை இதில் காண்போம்

மாஸ்டர்: 2021 ஆம் ஆண்டு சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், அர்ஜுன் தாஸ், சாந்தனு நடிப்பில் உருவான படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ, சுனே சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 135 கோடி. இந்த படம் உலக அளவில் 230 லிருந்து 300 கோடி வசூல் செய்தது.

Also Read: அடி மேல் அடி வாங்கும் ஷங்கர்.. சினிமாவிலும் தலை விரித்தாடும் மோசமான ராசி

பிகில்: விஜய்-அட்லீயின் ஹாட்ரிக் கூட்டணியாக அமைந்த படம் பிகில். கல்பாத்தி எஸ். அகோரம் மற்றும் ஏ. ஜி. எஸ். நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் வந்த ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி. கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்தது.

தர்பார் & இந்தியன் 2: ரஜினியின் தர்பார் மற்றும் கமல் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படங்கள் லைக்கா புரோடக்சன் கீழ் வரும். இந்த இரண்டு படங்களின் பட்ஜெட்டும் 200 கோடி. ரஜினியின் தர்பார் படம் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கியது. இந்த படத்தில் ரஜினி ரொம்ப நாட்களுக்கு பிறகு போலீசாக நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் 250 கோடி வசூல் செய்தது.

Also Read: நாலா பக்க வசூலுக்கு பலே திட்டம் போட்ட மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபலம்

பொன்னியின் செல்வன்: கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை எம் ஜி ஆர் லிருந்து பலரும் படமாக்க முயன்றனர். தற்போது இயக்குனர் மணிரத்னம் அந்த கனவை நனவாகியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய் என பல உச்ச நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸும், லைக்கா ப்ரொடக்சனும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி.

 2.0: தமிழ் சினிமாவிற்கு ஹை பட்ஜெட் படங்களை அறிமுகப்படுத்தியவரே இயக்குனர் ஷங்கர் தான். எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கினார். இந்த படத்தில் ரஜினி மற்றும் அக்சய் குமார் நடித்தனர். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 570 கோடி. கடந்த 2018 ஆம் ஆண்டு உருவான இந்த படம் தான் இதுவரை உருவான ஹை பட்ஜெட் படத்தில் அதிகமான பட்ஜெட் கொண்ட படமாகும். இந்த படத்தின் உலக அளவிலான வசூல் 800 கோடி என சொல்கிறார்கள்.

Also Read: ராஜமௌலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியம்.. சரண்டராகி பிரமிக்க வைத்த மணிரத்தினம்

Next Story

- Advertisement -